CSK vs GT : சென்னை அணி பைனலுக்கு போகனும்னா இதுமட்டும் தான் ஒரே வழி – ஓர் முழு அலசல் இதோ

Hardik Pandya MS DHoni GT vs CSK
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் 31-ம் தேதி துவங்கிய 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த வேளையில் இந்த தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு குஜராத், சென்னை, லக்னோ மற்றும் மும்பை ஆகிய நான்கு அணிகள் தேர்வாகியுள்ளன. இதன் காரணமாக இந்த தொடரின் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.

CSK vs GT

இந்நிலையில் இந்த தொடரின் முதலாவது குவாலிபயர் போட்டியானது நாளை மறுதினம் மே-24ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்க இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த ஒரு அலசலை இங்கு காணலாம். அதன்படி ஹார்டிக் பாண்டியாவின் தலைமையிலான குஜராத் அணி சிறப்பான பந்துவீச்சு மற்றும் அட்டகாசமான பேட்டிங் ஆகியவற்றை கொண்டுள்ளதால் அந்த அணியை வீழ்த்துவது கடினம் என்று பார்க்கப்படுகிறது. இருந்தாலும் அவர்கள் சேசிங்கை காட்டிலும் முதலாவதாக பேட்டிங் செய்யும்போது சற்று சறுக்களை சந்தித்துள்ளனர்.

GT vs CSK MS Dhoni

ஏனெனில் குஜராத் அணி மிக சிறப்பான பந்துவீச்சாளர்களை கொண்டு உள்ளதால் அந்த அணி எப்போதுமே முதலில் பந்துவீசி எதிரணியை அழுத்தத்திற்கு உள்ளாக்கி சேசிங்கில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளை குவித்து வருகிறது. அதே வேளையில் ஒருவேளை சென்னை அணி டாசில் வெற்றி பெற்று அவர்களை முதலில் பேட்டிங் செய்ய வைத்தால் நிச்சயம் 160-170 ரன்களுக்குள் சுருட்ட முடியும்.

- Advertisement -

அப்படி 170 ரன்களுக்குள் சென்னை அணி குஜராத் அணியை சுருட்டும் பட்சத்தில் நிச்சயம் எளிதாக சேசிங் செய்து வெற்றி பெற முடியும். அதுமட்டும் இன்றி சென்னை சேப்பாக்கம் மைதானம் சுழற்ப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான மைதானம் என்பதனாலும் சொந்த மைதானம் என்பதனாலும் இங்கு கிடைக்கும் ஆதரவு சென்னை அணிக்கு கூடுதல் பலத்தை அளிக்கும்.

இதையும் படிங்க : GT vs RCB : விஜய் ஷங்கரோட இந்த டேலன்ட் டேலன்ட் தெரியுமா உங்களுக்கு? வெற்றிக்கு பிறகு – சுப்மன் கில் பகிர்ந்த தகவல்

அதோடு டாஸ் வென்று சென்னை அணி முதலில் பந்து வீசினால் நிச்சயம் தோனியின் வழிகாட்டுதலின் கீழ் பந்துவீச்சில் அனைவரும் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் நிச்சயம் குஜராத் அணியை ஒரு பெரிய ரன் குவிப்பை தொட முடியாமல் சுருட்டி நிச்சயம் சென்னை அணி சேசிங் செய்து வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தால் நிச்சயம் குஜராத் அணியை வீழ்த்துவது கடினம் என்று பார்க்கப்படுகிறது.

Advertisement