GT vs RCB : விஜய் ஷங்கரோட இந்த டேலன்ட் டேலன்ட் தெரியுமா உங்களுக்கு? வெற்றிக்கு பிறகு – சுப்மன் கில் பகிர்ந்த தகவல்

Gill-and-Shankar
- Advertisement -

பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குஜராத் டைட்டன்ஸ் அணியானது ஆறு விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி அவர்களின் பிளே ஆப் வாய்ப்புக்கான கனவிற்கு முற்றுப்புள்ளி வைத்தது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் நுழையாடிய ஆர்.சி.பி அணியானது 197 ரன்களை குவிக்க தொடர்ந்து விளையாடிய குஜராத் அணி 198 ரன்கள் குவித்து அசத்தலான வெற்றியை பெற்றிருந்தது.

Gill 1

- Advertisement -

இந்த போட்டியின் போது முதலில் விளையாடிய பெங்களூரு அணி சார்பாக விராட் கோலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 101 ரன்கள் குவித்து இருந்தாலும் இரண்டாவது இந்த இன்னிங்சில் அவரது ஆட்டத்திற்கு இணையாக ஈடு கொடுத்து ஆடிய குஜராத் அணியின் துவக்க வீரர் சுப்மன் கில் 52 பந்துகளை சந்தித்து 5 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர்கள் என 104 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் தங்களது அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.

அவரது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் போட்டி முடிந்து தனது சிறப்பான ஆட்டம் பேசிய சுப்மன் கில் கூறுகையில் : நான் தற்போது மிகச் சிறப்பான ஃபார்மில் இருக்கிறேன். இந்த ஐபிஎல் தொடரில் முதல் பாதியில் என்னால் பெரிய ரன்களை குவிக்க முடியவில்லை. 40-50 ரன்கள் அடித்ததும் ஆட்டம் இழந்துவிட்டேன்.

Vijay Shankar

ஆனால் இந்த தொடரின் இரண்டாவது பாதியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை தொடர்ச்சியாக விளையாடி வருகிறேன். இது போன்ற போட்டிகளில் நல்ல இன்டெண்டுடன் விளையாடினால் மிகப்பெரிய ரன்கள் கிடைக்கிறது என்று சுப்மன் கில் பேசினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் விஜய் சங்கர் குறித்தும் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறுகையில் : இந்த போட்டியில் விஜய் சங்கர் வந்ததும் பலமாக அடிக்க ஆசைப்பட்டார். ஆனால் நான் அவரிடம் சென்று பந்தினை பார்த்து நல்ல ஷேப்புடன் டைமிங் செய்யுங்கள் பலமாக அடிக்க வேண்டாம் என்று நான் கூறினேன். விஜய் சங்கர் போன்ற ஒரு பிளேயர் நல்ல ஒரு முறையில் பேட்டிங்கில் மொமென்டத்தை பெற்று விட்டால் மிகப்பெரிய சிக்ஸர்களை அடிக்கும் திறமை அவரிடம் உள்ளது.

இதையும் படிங்க : IPL 2023 : அந்த ஜாம்பவான் பயிற்சியில் சாதிக்காத நீங்க எப்டி தான் முன்னேறுவிங்களோ – இளம் இந்திய வீரரை விமர்சித்த சேவாக்

என்னுடைய இந்த இன்னிங்ஸ் எவ்வளவு முக்கியமான ஒன்றோ அதேபோன்று விஜய் சங்கர் இந்த போட்டியில் ஆடிய இன்னிங்ஸ்தான் வெற்றிக்கு மொமென்டத்தை கொடுத்த இன்னிங்ஸ் என சுப்மன் கில் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement