2007இல் சச்சினுக்கு என்ன நடந்துச்சுன்னு மறந்துட்டீங்களா – ரவி சாஸ்திரியின் கருத்துக்கு டாம் மூடி பதிலடி, நடந்தது என்ன

Tom Moody 2
- Advertisement -

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் நடைபெறுகிறது. அதில் சொந்த ரசிகர்கள் ஆதரவுடன் 2011 போல கோப்பையை வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடரில் சந்தித்து வரும் தோல்விகளை நிறுத்த வேண்டிய கட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி களமிறங்குகிறது. முன்னதாக 2019 உலகக் கோப்பையில் ராயுடுவை கழற்றி விட்டு வாய்ப்பளிக்கப்பட்ட விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக், கேஎல் ராகுல் போன்ற பல வீரர்கள் நம்பர் 4வது இடத்தில் காயம் மற்றும் சுமாரான ஃபார்ம் காரணமாக நிலையாக விளையாடவில்லை.

KL rahul Shreyas Iyer

- Advertisement -

இருப்பினும் கடந்த வருடம் அந்த இடத்தில் சிறப்பாக செயல்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் 2022ஆம் ஆண்டு நடந்த ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்தார். அதனால் 4வது இடத்தில் விளையாடுவதற்கு ஆள் கிடைத்து விட்டது என ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்த நிலையில் காயத்தை சந்தித்த அவர் இதுவரை இன்னும் முழுமையாக குணமடையாமல் இருந்து வருவது இந்தியாவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

சச்சின் நிலைமை:
மேலும் 4வது இடத்தில் விளையாடுவதற்கு சரியான பேக்-அப் வீரர் இல்லாத நிலைமையில் யாரை வைத்து நிலைமையை சமாளிக்கலாம் என்று நிறைய முன்னாள் வீரர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர். அதில் திலக் வர்மாவை தேர்ந்தெடுத்து 4வது பேட்டிங் இடத்தையும் மிடில் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன் இல்லாத பிரச்சனையும் சரி செய்யலாம் என்று நிறைய கோரிக்கைகள் எழுந்தன. ஆனால் அதற்கு மத்தியில் பேசாமல் விராட் கோலியை 4வது இடத்தில் களமிறக்கி பிரச்சனையை தீர்த்து விடலாம் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வித்தியாசமான கருத்தை தெரிவித்தார்.

Ravi-Shastri-and-Kohli

இருப்பினும் ஆரம்ப காலம் முதலே பெரும்பாலும் 3வது இடத்தில் விளையாடி ஏராளமான ரன்களையும் வெற்றிகளையும் பெற்றுக் கொடுத்த விராட் கோலி திடீரென கடைசி நேரத்தில் மாற்றுவது சிறந்த முடிவாக இருக்காது என்று சில கருத்துக்களும் காணப்பட்டன. இந்நிலையில் 2007 டி20 உலக கோப்பையில் இதே போல தொடக்க வீரராக பட்டைய கிளப்பிய சச்சின் டெண்டுல்கரை தேவையின்றி 4வது இடத்தில் விளையாட வைத்தது எவ்வளவு பெரிய தோல்வியை கொடுத்தது என்பதை மறந்து விடாதீர்கள் என ரவி சாஸ்திரிக்கு முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டாம் மூடி பதிலளித்துள்ளார்.

- Advertisement -

அதாவது ஒரு இடத்தில் பல வருடங்கள் விளையாடி நன்கு செட்டிலானவரை திடீரென உலகக்கோப்பை போன்ற பெரிய தொடரில் மாற்றி களமிறங்குவது தோல்வியையே கொடுக்கும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “இந்திய கிரிக்கெட்டில் இந்த கலாச்சார பிரச்சனையும் உள்ளது. 2007 உலக கோப்பையில் ராகுல் டிராவிட் மற்றும் கிரேக் சேப்பல் ஆகியோர் அடங்கிய அணி நிர்வாகம் சச்சின் டெண்டுல்கரை ஓப்பனிங் செய்வதற்கு பதிலாக நம்பர் 4 இடத்திற்கு அனுப்பியது. ஏனெனில் அவர்கள் தங்களின் பேட்டிங் வரிசையின் முதலிடத்தில் வீரேந்தர் சேவாக் போன்றவர்கள் இருந்தனர்”

“ஆனால் இறுதியில் அது மிகப்பெரிய சர்ச்சையாக மாறி தோல்வியை கொடுத்தது. எனவே விராட் கோலி போன்ற மகத்தான வீரர் 4வது இடத்தில் விளையாட விரும்புகிறாரா என்பது தான் முக்கியம். அது எளிமையான தீர்வாக இருந்தாலும் அந்த முடிவை விராட் கோலி தான் எடுக்க வேண்டும்” என்று கூறினார். அதே போல அணியில் நிலவும் பெரிய பிரச்சனையை தீர்க்க விராட் கோலி பலி கிடவாக கிடைத்தாரா என ரவி சாஸ்திரிக்கு முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்சரேக்கரும் பதிலடி கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க:என் வாழ்க்கையை மாற்றியதே அந்த தருணம் தான். ரசிகர்களும் அதை மறக்காம இருக்காங்க – ரிங்கு சிங் நெகிழ்ச்சி

இது பற்றி அதே நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “இஷான் கிசான், விராட் கோலி போன்றவர்களின் விருப்பங்களை பற்றி நீங்கள் மேலும் மேலும் பேசினால் அவர் இன்னும் அதிகமான பின்னடைவையே சந்திப்பார். நீங்கள் அவரை நம்பர் 4வது இடத்தில் பேட் செய்ய வைத்தால் உங்கள் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து விடும் என்ற அர்த்தத்தில் பலி கிடாவாகி விட்டார்” என்று கூறினார்.

Advertisement