என் வாழ்க்கையை மாற்றியதே அந்த தருணம் தான். ரசிகர்களும் அதை மறக்காம இருக்காங்க – ரிங்கு சிங் நெகிழ்ச்சி

Rinku-Singh
- Advertisement -

அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அங்கு நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் முதன்மை வீரர்கள் அனைவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் பும்ரா தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியே அங்கு பயணித்து விளையாடி வருகிறது.

Rinku-Singh

- Advertisement -

அண்மையில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கும் விதமாக பல இளம் வீரர்களுக்கு இந்த தொடரில் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

அந்த வகையில் முதல் முறையாக இந்திய அணியில் இடம் பிடித்திருந்த ரிங்கு சிங்கிற்கு முதலாவது போட்டியில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் இரண்டாவது போட்டியின் போது வெற்றிக்கு தேவையான 38 ரன்களை அதிரடியாக குவித்து ஆட்டநாயகன் விருதினையும் தட்டிச் சென்றிருந்தார்.

Rinku Singh 1

கடைசி கட்ட ஓவர்களில் அவரது அதிரடி மிகச் சிறப்பாக இருப்பதால் தொடர்ச்சியாக அவர் இந்திய அணியில் விளையாட வேண்டும் என்று ரசிகர்களும் ஆதரவு தந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த அயர்லாந்து தொடரில் தான் சிறப்பாக செயல்பட்டு வரும் விதம் குறித்து பேசியுள்ள ரிங்கு சிங் கூறுகையில் :

- Advertisement -

அயர்லாந்து அணிக்கு எதிராக தற்போது நாங்கள் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறோம். மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்று முழுமையாக கோப்பையினை வெல்வோம் என நம்புகிறேன். முதல் ஆட்டத்தில் விளையாட ஆவலுடன் காத்திருந்தேன். ஆனால் மழையால் என்னால் பேட்டிங் செய்ய முடியாமல் போனது. பிறகு இரண்டாவதாக எனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி விளையாடி உள்ளேன்.

இதையும் படிங்க : விராட் கோலி இல்ல, 2023 உலக கோப்பையில் அந்த இந்திய வீரரை ஆஸ்திரேலியாவுக்கு கொடுத்துருங்க – ஹெய்டன் ஜாலியான கோரிக்கை

ஐபிஎல் போட்டியில் 5 சிக்சர்களை அடித்தது தான் எனது வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது. அந்த தருணத்தை ரசிகர்கள் இன்றளவும் மறக்காமல் நினைவில் வைத்து என் மீது அன்பை பொழிந்து வருகிறார்கள். அதன் காரணமாகவே நான் மகிழ்ச்சியுடன் விளையாடி வருகிறேன் என ரிங்கு சிங் நெகிழ்ச்சியான சில கருத்துக்களை பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement