
அண்மையில் இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இழந்திருந்த நியூஸிலாந்து அணியானது இந்தியா வந்து இங்கு நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. முன்னதாக பெங்களூரு மற்றும் புனே நகரில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி ஏற்கனவே இந்த தொடரை கைப்பற்றி இருந்த வேளையில் மூன்றாவது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணியானது இந்திய அணியை வீழ்த்தி அற்புதமான வெற்றியை பெற்றுள்ளது. அந்த வகையில் மும்பையில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 235 ரன்கள் குவித்தது.
பின்னர் தொடர்ந்து விளையாடிய இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 263 ரன்கள் குவித்தது, அதனை தொடர்ந்து தங்கள் இரண்டாவது இன்னிங்சில் விளையாடிய நியூசிலாந்து அணி 174 ரன்கள் மட்டுமே அடித்ததால் இந்திய அணியின் வெற்றிக்கு 146 ரன்கள் என்கிற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால் இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 121 ரன்களுக்கு ஆல் அவுட்டானதால் நியூசிலாந்து அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த வெற்றி குறித்து பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லேதம் கூறுகையில் : நாங்கள் இந்த தொடர் ஆரம்பிக்கும் போது இந்த நிலைக்கு வருவோம் என்று நினைக்கவில்லை.
உண்மையாகவே கடைசி மூன்று போட்டியிலும் எங்களது அணியின் அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாடினர். ஒவ்வொரு போட்டியின் போதும் நாங்கள் நினைத்ததை எங்களால் செய்ய முடிந்தது. முதல் இரண்டு போட்டிகளை விட மும்பை மைதானம் இன்னும் வித்தியாசமாக இருந்தது. எங்களுக்கு இந்த மைதானத்தில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இருந்த சவால்களை கடந்து மிகச் சிறப்பாக செயல்பட்டதில் மகிழ்ச்சி.
இதையும் படிங்க : உண்மையிலேயே இப்படி நடந்ததை என்னால் ஏத்துக்க முடியல.. தோல்விக்கு பிறகு – ரோஹித் சர்மா வருத்தம்
இந்தத் தொடர் முழுவதுமே எங்களது அணியின் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசி அசத்தியுள்ளனர். மேலும் பேட்டிங்கிலும் எங்களால் பங்களிக்க முடிந்தது. இந்த வெற்றி எங்களுக்கு ஒரு அணியாக மிகச் சிறப்பான உணர்வைத் தந்துள்ளது என டாம் லேதம் கூறியது குறிப்பிடத்தக்கது.