உண்மையிலேயே இப்படி நடந்ததை என்னால் ஏத்துக்க முடியல.. தோல்விக்கு பிறகு – ரோஹித் சர்மா வருத்தம்

Rohit
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது மும்பை வான்கடை மைதானத்தில் இன்று நடைபெற்ற மூன்றாம் நாள் ஆட்டத்துடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணியானது இந்திய அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மட்டுமின்றி மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் இந்த தொடரையும் கைப்பற்றி அசத்தியது.

இந்த தோல்வியை ஏத்துக்க முடியல :

இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்விக்கு பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் : உண்மையிலேயே இந்த தொடரை இழந்தது வருத்தம் அளிக்கிறது. ஒரு டெஸ்ட் போட்டியையோ அல்லது ஒரு டெஸ்ட் தொடரையோ இழப்பது என்பது சாதாரணமான விடயம் கிடையாது. இந்த தோல்வியை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

- Advertisement -

நாங்கள் இந்த தொடர் முழுவதுமே சிறப்பான கிரிக்கெட்டை விளையாடவில்லை என்பதை ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும். அதே வேளையில் நியூசிலாந்து அணி சரியான ஆட்டத்தை விளையாடியது. இந்த போட்டியில் நாங்கள் பல தவறுகளை செய்து விட்டோம். அதையும் ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும்.

இந்த இலக்கு என்பது நிச்சயம் சேசிங் செய்யக்கூடிய ஒன்றுதான். ஆனால் பேட்டிங்கில் சரியான பார்ட்னர்ஷிப் எங்களுக்கு கிடைக்கவில்லை. இந்த தொடரில் ரிஷப் பண்ட், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற இளம் வீரர்கள் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.

- Advertisement -

தனிப்பட்ட வகையில் ஒரு பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் நான் சிறப்பாக செயல்படவில்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். ஆனாலும் நிச்சயம் மீண்டும் ஒரு அணியாக நாங்கள் பலமாக திரும்பவும் என ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஐ.பி.எல் தொடரிலிருந்து ஓய்வு எப்போது? சூசகமாக அறிவித்த ரன் மெஷின் விராட் கோலி – விவரம் இதோ

தற்போது நியூசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணியானது அடுத்ததாக ரோஹித் சர்மா தலைமையில் ஆஸ்திரேலிய பயணித்து அங்கு நடைபெறயிருக்கும் 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement