கிடைச்ச வாய்ப்பை நாங்களே விட்டுட்டோம். இந்திய அணி அங்க தான் எங்களை தோக்கடிச்சாங்க – லேதம் வருத்தம்

Tom Latham
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2022 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 22ஆம் தேதி தர்மசாலாவில் நடைபெற்ற லீக் போட்டியில் வலுவான நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா தொடர்ச்சியான 5வது வெற்றியை பதிவு செய்து அசத்தியது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக டார்ல் மிட்சேல் சதமடித்து 103 ரன்களும் ரச்சின் ரவீந்திரா 75 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 274 ரன்கள் துரத்திய இந்தியாவுக்கு 71 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பான துவக்கத்தை கொடுத்த கேப்டன் ரோகித் சர்மா 46, கில் 26 ரன்களில் அவுட்டானார்கள்.

- Advertisement -

கடைசியில் சொதப்பல்:
அந்த நிலையில் விராட் கோலியுடன் இணைந்து விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 33, ராகுல் 27 ரன்களில் அவுட்டாக சூரியகுமார் யாதவ் 2 ரன்னில் துரதிஷ்டவசமாக ரன் அவுட்டானார். ஆனால் மறுபுறம் தொடர்ந்து அசத்திய விராட் கோலி சதத்தை தவறவிட்டாலும் 95 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்த நிலையில் ஜடேஜா 39* ரன்கள் எடுத்ததால் 48 ஓவரில் இலக்கை எட்டிய இந்தியா 20 ரன்கள் கழித்து ஐசிசி தொடரில் நியூசிலாந்தை தோற்கடித்தது.

அதனால் அதிகபட்சமாக பெர்குசன் 2 விக்கெட்டுகள் எடுத்தும் நியூசிலாந்து இத்தொடரில் முதல் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இப்போட்டியில் மிட்சேல் – ரவீந்திரா சிறப்பான ஆட்டத்தால் 243/5 என்ற நல்ல நிலைமையில் இருந்த தங்களது அணி 300 ரன்களை தொடாமல் கடைசி 10 ஓவரில் சொதப்பியதே தோல்விக்கு காரணம் என்று நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் சேசிங்கில் விராட் கோலியையும் நிறுத்த முடியவில்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி போட்டியின் முடிவில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“நாங்கள் ஓரளவு சிறப்பாகவே செயல்பட்டோம். இருப்பினும் நல்ல துவக்கத்தை கடைசி 10 ஓவர்களில் சரியாக பயன்படுத்தவில்லை. அங்கே நாங்கள் சொதப்பி விட்டோம். இந்தியாவுக்கு அதற்கான பாராட்டுக்கள். ரச்சின் – மிட்சேல் ஆகியோர் பார்ட்னர்ஷிப் போட்டு கடைசி 10 ஓவரில் அதிரடி காட்டுவதற்கான அடித்தளத்தை கொடுத்தனர். அந்த இடத்தில் அசத்துவதற்கான நல்ல அணியும் எங்களிடம் இருக்கிறது. ரச்சின் போலவே அசத்திய மிட்சேல் 100 ரன்கள் அடித்தார்”

இதையும் படிங்க: அவரைப்பத்தி பேச எதுவும் இல்ல. பல வருஷமா இதைத்தான் பண்றாரு. விராட் கோலியை புகழ்ந்து தள்ளிய – ரோஹித் சர்மா

“குறிப்பாக மிட்சேல் சிறப்பாக விளையாடி கட்டுக்கோப்புடன் செயல்பட்டு எங்களின் இதர பேட்ஸ்மேன்களுக்கு உதவினார். ஆனால் நாங்கள் அதை சரியாக பொருத்த முயற்சிக்க வேண்டும். மேலும் பந்து வீச்சில் நாங்கள் இரட்டை விக்கெட்டுகளை எடுக்கவில்லை. இருப்பினும் எங்களுடைய பவுலர்கள் முடிந்தளவுக்கு சிறப்பாக செயல்பட்டனர். விராட் கோலி சேசிங்கில் அபாரமாக செயல்படுகிறார். அவரை தடுத்து நிறுத்துவது கடினமாகும். அடுத்ததாக இதே மைதானத்தில் எங்களுக்கு ஒரு பகல் போட்டி இருக்கிறது. அதில் நாங்கள் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்த விரும்புகிறோம்” என்று கூறினார்.

Advertisement