எனக்கு தேவை இதுமட்டும் தான். மத்தபடி சேன்ஸ் கிடைக்கலனா பரவாயில்ல – ஆட்டநாயகன் ஷமி அசத்தல் பேச்சு

Shami
- Advertisement -

இந்தியாவில் கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி துவங்கிய ஐசிசியின் 13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே முதல் நான்கு போட்டிகளில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது இன்று தங்களது ஐந்தாவது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியையும் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தங்களது ஐந்தாவது வெற்றியை பதிவு செய்ததோடு புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கும் சென்றுள்ளது.

இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடரின் முதல் நான்கு ஆட்டங்களில் இடம்பெறாத இந்திய அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளரான வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு இன்றைய நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஷர்துல் தாகூருக்கு பதிலாக வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

- Advertisement -

அந்த வாய்ப்பினை மிகச்சிறப்பாக பயன்படுத்தி கொண்ட முகமது ஷமி இந்த போட்டியில் முழுவதுமாக 10 ஓவர்களையும் வீசி 54 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தினார்.

அவரது இந்த சிறப்பான பந்துவீச்சின் காரணமாக இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது அவருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் போட்டி முடிந்து தனது சிறப்பான செயல்பாடு குறித்து பேசிய ஆட்டநாயகன் முகமது ஷமி கூறுகையில் : இந்த போட்டியில் நான் வீசிய முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தியது எனக்கு ஆரம்பத்திலேயே நல்ல நம்பிக்கையை கொடுத்தது.

- Advertisement -

அதோடு நமது அணியின் வீரர்கள் நன்றாக செயல்படும்போது அவர்களை ஆதரிப்பது தான் முக்கியம். எனக்கு முதல் நான்கு போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காதது பற்றி நான் பெரிதாக யோசித்தது கிடையாது. ஏனெனில் அணியின் செயல்பாடு திருப்தியாக அமைய வேண்டும் அதுதான் நமக்கு முக்கியம். அதனால் இந்திய அணி வெற்றி பெற்றால் போதும் எனது வாய்ப்பு கிடைக்காமல் போனால் அது பெரிய விடயம் கிடையாது. நான் அதனை புரிந்து அணிக்கு ஆதரவாக இருக்கிறேன்.

இதையும் படிங்க: அவரைப்பத்தி பேச எதுவும் இல்ல. பல வருஷமா இதைத்தான் பண்றாரு. விராட் கோலியை புகழ்ந்து தள்ளிய – ரோஹித் சர்மா

இன்றைய போட்டியில் எனக்கு கிடைத்த வாய்ப்பில் மிகச் சிறப்பாக செயல்பட்டதில் மகிழ்ச்சி. குறிப்பாக கடைசி கட்டத்தில் நான் எடுத்த விக்கெட்டுகள் அணிக்கு பெரிய பங்களிப்பை வழங்கியது. இந்த போட்டியில் எனது பந்துவீச்சு சிறப்பாக அமைந்ததோடு சேர்த்து இந்திய அணி புள்ளி பட்டியல் முதல் இடத்திற்கும் சென்றதில் மிகவும் மகிழ்ச்சி என முகமது ஷமி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement