ரெண்டு டீம்லயும் ரெண்டு டிபார்ட்மென்ட்டும் செம ஸ்ட்ராங் தான். இந்திய அணிக்கு சவால் விடும் வகையில் – டாம் லேதம் பேட்டி

Tom-Latham
- Advertisement -

இந்தியாவில் கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி துவங்கிய நடப்பு 2023-ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள பத்து அணிகளும் தற்போது லீக் சுற்றுப் போட்டியில் விளையாடி வருகின்றன. அந்த வகையில் இந்த தொடரில் முதல் நான்கு ஆட்டங்களில் அனைத்து அணிகளும் பங்கேற்று விளையாடிவிட்டன.

அதில் டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணி முதல் இடத்திலும், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இரண்டாவது இடத்திலும் உள்ளன. இரு அணிகளுமே தலா 4 வெற்றிகள் பெற்று எட்டு புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன.

- Advertisement -

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முக்கியமான லீக் போட்டியானது இன்று தர்மசாலா நகரில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு செல்லும் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இன்றைய போட்டிக்கு முன்னதாக பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசியுள்ள நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லேதம் கூறுகையில் : இரு அணிகளுமே மிகச்சிறப்பான அணியாகும். நீண்ட காலமாக இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

- Advertisement -

போட்டிகள் எங்கு நடந்தாலும் இந்திய அணி சவாலான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறது. அதேபோன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியும் எப்போதும் விறுவிறுப்பாக இருக்கக்கூடிய ஒன்றுதான். இந்த உலகக் கோப்பையில் இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது. அதேபோல் நாங்களும் சிறப்பாக விளையாடி வருகிறோம்.

இதையும் படிங்க : ஏற்கனவே அவங்க இருக்குற நிலைமைக்கு இதுவேறயா? இங்கிலாந்து அணியிலிருந்து விலகிய முன்னணி வீரர் – விவரம் இதோ

எனவே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இன்றைய போட்டி நிச்சயம் விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும் என்று நம்புகிறேன். அதேபோன்று இரண்டு அணிகளுமே பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டு டிபார்ட்மென்ட்டுகளிலும் வலுவாக இருக்கிறது. நிச்சயம் இந்த ஆட்டத்தில் கடுமையான போட்டி நிலவும் என்றும் அதனை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறோம் எனவும் டாம் லேதம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement