- Advertisement -
டி20

அஸ்வின் போல நின்ற பூரான்.. தோனி போல நேர்மைத்தன்மையை காட்டிய ஃபிளவர்.. அபுதாபியில் நெகிழ்ச்சி

ஐக்கிய அரபு நாடுகளில் ஐஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 2025 சீசன் நடைபெற்று வருகிறது. ஜனவரி 25ஆம் தேதி அபுதாபி நகரில் நடைபெற்ற 19வது போட்டியில் எம்ஐ எமிரேட்ஸ் மற்றும் கல்ஃப் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஃகல்ப் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய எம்ஐ 20 ஓவரில் 151-6 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக டாம் பாண்டன் 56, கைரன் பொல்லார்ட் 34 ரன்கள் எடுத்த நிலையில் ஃகல்ப் அணிக்கு டேனியல் ஓரல் 2 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்ததாக விளையாடிய ஃகல்ப் அணி போராடி 20 ஓவரில் 152-8 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக டாம் அல்சோப் 32, ஜெரால்டு எரஸ்மஸ் 37 ரன்கள் எடுத்தார்கள். எம்ஐ அணிக்கு அதிகபட்சமாக பரூக்கி 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

அடம் பிடித்த பூரான்:

முன்னதாக அந்தப் போட்டியில் 17.5 ஓவரில் ஃகல்ப் அணி 134-6 என்ற நிலையில் இருந்த போது வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது கடைசி பந்தை எதிர்கொண்ட மார்க் அடைர் சிங்கிள் எடுத்தார். அதற்காக எதிர்ப்புறம் இருந்து ஓடி வந்த டாம் கரண் எதிர்பக்கமாக சென்று வெள்ளைக்கோட்டை தொட்டு சிங்கிள் எடுத்தார்.

ஆனால் அத்துடன் அந்த பந்து முடிந்து விட்டதாக நினைத்த அவர் கொஞ்சம் மறதியுடன் வெள்ளைக்கோட்டை விட்டு வெளியேறினார். ஏனெனில் அவர் வெள்ளைக்கோட்டை தொட்டு வெளியேறும் வரை பந்து விக்கெட் கீப்பர் கைக்கும் வரவில்லை. காலாவதியும் ஆகவில்லை. மறுபுறம் பந்தை எடுத்த பொல்லார்ட் விக்கெட் கீப்பர் நிக்கோலஸ் பூரான் கைகளில் போட்டார். அதைப் பிடித்த பூரான் டாம் கரண் வெளியேறியதை பயன்படுத்தி ரன் அவுட் செய்து விக்கெட் கேட்டார்.

- Advertisement -

நேர்மைத்தன்மையுடன் ஃபிளவர்:

அதற்கு நடுவர்கள் இதையெல்லாமா கேட்பீர்கள்? என்ற வகையில் ஆரம்பத்தில் ஆர்வம் காட்டவில்லை. இருப்பினும் விதிமுறைக்கு உட்பட்டு மன்கட் செய்தேன் என்ற வகையில் பட்லரை அவுட்டாக்கிய அஸ்வின் போல பூரான் விடாப்பிடியாக விக்கெட் கேட்டார். அதைத் தொடர்ந்து சோதித்த போது டாம் கரண் விதிமுறைகள் அடிப்படையில் அவுட்டானது தெரிந்ததால் 3வது நடுவர் விக்கெட்டை கொடுத்தார்.

இதையும் படிங்க: என்ன தம்பி என்னாச்சு? 40/6ன்னு சவால் விட்ட.. ஆர்ச்சருக்கு மோசமான சாதனையை பார்சல் கட்டிய இந்தியா

அதனால் டாம் கரண் ஏமாற்றத்துடன் வெளியேறினார். ஆனால் பெவிலியனில் இருந்த எம்ஐ அணியின் பயிற்சியாளர் மற்றும் ஜாம்பவான் ஆன்ட்டி ஃபிளவர் “தங்கள் அணி சார்பாக நான் சொல்கிறேன் நீங்கள் மீண்டும் சென்று விளையாடுங்கள்” என்ற வகையில் டாம் கரணை களத்திற்குள் அனுப்பியது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய கைதட்ட வைத்தது. அது 2011 டெஸ்ட் போட்டியில் இயன் பெல் விக்கெட்டை தோனி திரும்ப பெற்று மீண்டும் விளையாட அனுமதித்ததை நினைவுபடுத்துவதாக அமைகிறது.

- Advertisement -