ஆர்சிபி அணிக்கு வாங்கப்பட்ட நேரமா.. இங்கிலாந்து வீரருக்கு ஆஸி வாரியம் அதிரடி தடை.. நடந்தது என்ன?

Tom Curran
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் பிக் பேஷ் லீக் எனப்படும் டி20 கிரிக்கெட் தொடர் ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வருகிறது. அதில் 2023/24 சீசனில் சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்காக இங்கிலாந்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் டாம் கரண் விளையாடி வருகிறார். அந்த நிலைமையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு எதிராக சிக்னி சிக்ஸர்ஸ் விளையாடிய போட்டி லான்செஸ்டன் நகரில் நடைபெற்றது.

அப்போட்டிக்கு முன்பாக இரு அணிகளை சேர்ந்த வீரர்களும் மைதானத்தில் வழக்கம் போல பயிற்சிகளை செய்தனர். அப்போது டாம் கரண் போட்டி நடைபெறவிருந்த பிட்ச்சில் பந்து வீசி பயிற்சி எடுக்க விரும்பியுள்ளார். ஆனால் அதற்கு அனுமதிக்காத போட்டியின் 4வது நடுவர் அருகில் உள்ள வேறு பிட்ச்சில் பயிற்சி எடுங்கள் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

அதிரடி தடை:
இருப்பினும் அதை ஏற்காத டாம் கரன் அதே பிட்ச்சில் பயிற்சி எடுப்பேன் என்று சொல்லிக் கொண்டே பந்து வீசும் இடத்திற்கு சென்று நின்றார். அப்போது பிட்ச்சின் பக்கவாட்டு பகுதியில் கூட நீங்கள் வரக்கூடாது வேண்டுமானால் ஓரமாக சென்று பந்து வீசுங்கள் என்று மீண்டும் நடுவர் அவருக்கு எச்சரிக்கை கொடுத்தார்.

ஆனாலும் அதையும் ஏற்காத டாம் கரண் ஓடி வந்தார். அப்போது இந்த லைனில் வரக்கூடாது என்ற வகையில் நடுவர் குறுக்கே நின்றார். இருப்பினும் அதை மதிக்காத டாம் கரன் வேகமாக ஓடி வந்து நடுவரின் அருகே வந்ததும் குதிரை போல தாவி கலாய்த்து விட்டு அவரை தாண்டி ஓடினார். பொதுவாக போட்டி துவங்குவதற்கு முன்பாக அதற்கான பிட்ச்சில் மைதான பராமரிப்பாளர்களை தவிர்த்து யாரும் நடந்து கூட செல்லக்கூடாது என்பது விதிமுறையாகும்.

- Advertisement -

அதை விட போட்டி துவங்குவதற்கு முன்பாக பிட்ச்சில் இரு அணிகளைச் சேர்ந்த பவுலர்களும் ஒரு பந்தை கூட வீசி பயிற்சி செய்யக்கூடாது என்பது கண்டிப்பான விதிமுறையாகும். மேலும் பவுலர்கள் பயிற்சி எடுக்க உலகின் அனைத்து மைதானங்களிலும் இருபுறத்தின் பக்கவாட்டு பகுதிகளிலும் அல்லது பவுண்டரி எல்லையின் அருகிலும் 4 முதல் 5 எக்ஸ்ட்ரா பிட்ச்கள் அமைக்கப்பட்டிருக்கும். அந்த வகையில் போட்டி நடைபெறவிருந்த பிட்ச்சில் அனுமதியைத் தாண்டி பந்து வீச முயற்சித்ததை நடுவர்கள் தடுத்ததை கிண்டலடித்ததாக புகார் செய்தனர்.

இதையும் படிங்க: அறிமுகமாக களமிறங்கிய இளம் வீரர்.. ருதுராஜ் விலகியதற்கான காரணத்தை கேட்டு கலாய்க்கும் ரசிகர்கள்

அதை விசாரித்த ஆஸ்திரேலிய வாரியம் 2.17 விதிமுறை மீறி பிட்ச்சில் சென்றதுடன் நடுவரை கலாய்த்த டாம் கரணுக்கு அடுத்த 4 பிபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்கு அதிரடி தடையை விதித்துள்ளது. அதற்கு சிட்னி சிக்ஸர்ஸ் மேல் முறையீடு செய்துள்ளது. மொத்தத்தில் இந்த செய்தியை அறியும் இந்திய ரசிகர்கள் எல்லாம் 2024 ஐபிஎல் ஏலத்தில் 1.5 கோடிக்கு டாம் கரண் பெங்களூருவுக்கு வாங்கப்பட்ட நேரம் என்று சமூக வலைதளங்களில் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement