அறிமுகமாக களமிறங்கிய இளம் வீரர்.. ருதுராஜ் விலகியதற்கான காரணத்தை கேட்டு கலாய்க்கும் ரசிகர்கள்

Rajat Patidar
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. இருப்பினும் 2வது போட்டியில் வென்று பதிலடி கொடுத்த தென்னாபிரிக்கா தொடரை சமன் செய்தது. அதனால் சமனில் உள்ள இத்தொடரின் கடைசி போட்டி டிசம்பர் 21ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு பார்ல் நகரில் துவங்கியது.

அதில் வென்று சொந்த மண்ணில் கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்ற தென்னாபிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. மறுபுறம் இந்திய அணியில் ருதுராஜ் கைக்வாட்க்கு பதிலாக மற்றொரு இளம் வீரர் ரஜத் படிதாருக்கு அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பு கிடைத்தது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

- Advertisement -

இதெல்லாம் காரணமா:
ஏனெனில் சமீபத்திய வருடங்களாகவே உள்ளூர் தொடர்களில் நன்றாக செயல்பட்டு வரும் அவர் கடந்த 2022 ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக எலிமினேட்டர் போட்டியில் அதிரடியாக சதமடித்து வெற்றி பெற உதவினார். அதன் காரணமாக சமீபத்தில் இந்தியாவுக்காக அவ்வப்போது தேர்வானாலும் பெஞ்சில் மட்டுமே அமர்ந்திருந்த அவர் ஒரு வழியாக இந்த போட்டியில் விளையாடும் 11 பேர் அணியில் வாய்ப்பு பெற்றார்.

அந்த வகையில் தம்முடைய கனவு தொப்பியை பெற்று அவர் அறிமுகமானது பெங்களூரு ரசிகர்களையும் மகிழ்ச்சியடைய வைத்தது. மறுபுறம் ருதுராஜ் கடந்த போட்டியில் ஃபீல்டிங் செய்யும் போது கையில் ஏற்பட்ட காயத்திலிருந்து இன்னும் குணமடையாததால் இந்த போட்டியில் விலகுவதாக தற்போது பிசிசிஐ அறிவித்துள்ளது.

- Advertisement -

சொல்லப்போனால் முதல் 2 போட்டிகளில் சுமாராக விளையாடிய அவர் முறையே 5, 4 ரன்கள் மட்டும் எடுத்து மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி வந்தார். அதன் காரணமாக நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இந்த போட்டியில் அவர் நீக்கப்படுவார் ரசிகர்கள் ஆரம்பத்திலேயே எதிர்பார்த்தனர். ஆனால் தற்போது காயமடைந்ததால் ருதுராஜ் விலகியுள்ளார் என்று பிசிசிஐ கூறியுள்ளது.

இதையும் படிங்க: அறிமுகமாக களமிறங்கிய இளம் வீரர்.. ருதுராஜ் விலகியதற்கான காரணத்தை கேட்டு கலாய்க்கும் ரசிகர்கள்

இருப்பினும் அதை ஏற்றுக்கொள்ளாத ரசிகர்கள் சுமாராக செயல்பட்ட வீரரை காயம் என்ற பெயரில் வெளியேற்றும் உங்களுடைய ஐடியா நன்றாக இருக்கிறது என்று ட்விட்டரில் கலாய்த்து வருகின்றனர். ஏனெனில் 2வது போட்டியில் ஃபீல்டிங் செய்யும் போது ருதுராஜ் காயமடைந்ததை எந்த ரசிகர்களும் பார்க்கவில்லை செய்திகளும் வெளியாகவில்லை. சொல்லப்போனால் சமீப காலங்களாகவே சுமாராக செயல்படும் வீரர்களை காயம் என்ற பெயரில் இந்திய அணியிலிருந்து நீக்குவது வாடிக்கையாக வருகிறது. அதனாலேயே ரசிகர்கள் தற்போது இப்படி கலாய்ப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement