அதுல முடிஞ்சு போன ரோஹித்தை நம்புறது பயனில்ல.. மும்பை அவரை தான் நம்பனும்.. சஞ்சய் மஞ்ரேக்கர்

Sanjay Manjrekar 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்படுவார் என்று மும்பை நிர்வாகம் அறிவித்தது. ஆனால் 2013 – 2020 வரையிலான காலகட்டத்திற்குள் 5 கோப்பைகளை வென்று கொடுத்து குறுகிய காலத்திலேயே வெற்றிகரமான அணியாக ஜொலிக்க வைத்த நன்றியை மறந்து ரோகித் சர்மாவை கழற்றி விட்ட மும்பையை இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான ரசிகர்கள் பின்தொடர்வதை நிறுத்தி வருகின்றனர்.

இருப்பினும் வருங்காலத்தை கருத்தில் கொண்டு ஹர்திக் பாண்டியாவை தங்களின் கேப்டனாக நியமித்துள்ளதாக தெரிவித்த மும்பை அந்த முடிவிலிருந்து பின்வாங்குவதாக தெரியவில்லை. அதற்கேற்றார் போல் கடந்த சில வருடங்களாகவே ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாட முடியாமல் தடுமாறும் ரோகித் சர்மா கடந்த சீசனில் அதிக முறை டக் அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனை படைத்தார்.

- Advertisement -

நம்புவதில் அர்த்தமில்ல:
மேலும் அவரின் தலைமையில் 2021, 2022 சீசன்களில் மோசமாக விளையாடிய மும்பை புள்ளிப்பட்டியலில் 9, 10 கடைசி இடங்களை பிடித்து அவமானத்தை சந்தித்தது. இந்நிலையில் 2024 சீசனில் மும்பை வெற்றி பெறுவதற்கு பேட்டிங் துறையில் ரோகித் சர்மாவை நம்புவதில் அர்த்தமில்லை என சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார்.

ஏனெனில் 2023 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடினாலும் டி20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவின் செயல்பாடுகள் கேள்விக்குறியாக இருப்பதாக தெரிவிக்கும் அவர் மும்பை வெற்றி பெறுவதற்கு அதிகமாக சூரியகுமார் யாதவை சார்ந்திருக்கும் என்று கணித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கடந்த சில வருடங்களுக்கு முன்பாக இசான் கிசானுக்கு மும்பை பெரிய கோடிகளை கொடுத்தது. இப்போதும் அவர் அதே ஃபார்மில் தான் இருக்கிறார்”

- Advertisement -

“அதே போல டிம் டேவிட் இன்னும் கைரன் பொல்லார்ட் இடத்தை நிரப்ப முடியாமல் தடுமாறுகிறார். எனவே தற்சமயத்தில் நல்ல ஃபார்மில் இருக்கும் ஒரு வீரரை வெற்றிக்காக மும்பை நம்பியிருக்க வேண்டுமெனில் அது சூரியகுமார் யாதவாக இருப்பார். மறுபுறம் ரோகித் சர்மா என்னை பொறுத்த வரை டி20 கிரிக்கெட்டில் கேள்விக்குறியாக இருக்கிறார். 2023 உலகக் கோப்பையில் அவர் இப்போதும் தம்மால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை காண்பித்தார்”

இதையும் படிங்க: வெற்றிக்கான திட்டாமா இது.. இருந்த 2 பேரையும் கழற்றி விட்டீங்க.. அவரையாச்சும் வாங்குங்க.. ஆர்சிபி’க்கு ஏபிடி அட்வைஸ்

“ஆனால் 2023 உலகக் கோப்பை முற்றிலும் வித்தியாசமானது. அதில் 50 ஓவர்கள் இருக்கும் என்பது உங்களுக்கு தெரியும். அதனால் அவர் அப்படி அதிரடியாக விளையாடினர். அதே சமயம் பவுலர்களும் 50 ஓவர் போட்டிகளில் டி20 கிரிக்கெட்டை விட சற்று வித்தியாசமாக பந்து வீசுவார்கள்” என்று கூறினார். அவர் கூறுவது போல 2023 சீசனில் ஆரம்பத்தில் தடுமாறிய மும்பை பின்னர் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற சூரியகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.

Advertisement