வெற்றிக்கான திட்டாமா இது.. இருந்த 2 பேரையும் கழற்றி விட்டீங்க.. அவரையாச்சும் வாங்குங்க.. ஆர்சிபி’க்கு ஏபிடி அட்வைஸ்

AB De Villiers 4
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடருக்கான ஏலம் துபாயில் நடைபெற்ற முடிந்தது. அதற்கு முன்பாக ஜோஸ் ஹேசல்வுட், ஹர்ஷல் படேல், வணிந்து ஹஸரங்கா ஆகிய 3 பவுலர்களை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் விடுவித்தது. அவர்களுக்கு பதிலாக ஏலத்தில் அல்சாரி ஜோசப், யாஷ் தயாள், டாம் கரண், லாக்கி பெர்குசன் ஆகிய 4 வேகப்பந்து வீச்சாளர்களை பெங்களூரு வாங்கியது.

இருப்பினும் ஹஸரங்கா இடத்தை நிரப்பும் அளவுக்கு தரமான லெக் ஸ்பின்னரை பெங்களூரு அணி நிர்வாகம் வாங்காமல் கோட்டை விட்டுள்ளது. சொல்லப்போனால் இந்தியாவுக்காக விளையாடும் அளவுக்கு அசத்திய யுஸ்வேந்திர சஹாலை கடந்த சில வருடங்களுக்கு முன்பாக கழற்றி விட்ட பெங்களூரு நிர்வாகம் ஹசரங்காவை பெரிய தொகை கொடுத்து வாங்கியது.

- Advertisement -

திட்டமே இல்லை:
ஆனால் அவரையும் நம்பாமல் 2 வருடத்திலேயே கழற்றி விட்ட பெங்களூரு அணியில் தற்போதைக்கு நல்ல ஸ்பின்னர் இல்லாதது பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. இந்நிலையில் 11 பேர் அணியில் லெக் ஸ்பின்னர் அவசியமாக வேண்டும் என்ற திட்டத்துடன் பெங்களூரு அணி நிர்வாகம் ஏலத்தில் செயல்படவில்லை என முன்னாள் ஜாம்பவான் வீரர் ஏபி டீ வில்லியர்ஸ் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் சஹாலை கழற்றி விட்டு வாங்கிய ஹசரங்காவையும் தக்க வைக்க தவறிய பெங்களூரு வருங்காலங்களில் டிரேடிங் முறையில் குஜராத்துக்காக விளையாடும் ரசித் கானை வாங்க முயற்சிக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஒன்று அல்லது 2 தரமான ஸ்பின்னர்கள் துருப்பு சீட்டாக இருப்பார்கள் என்று நான் சொல்வேன். ரஷித் கான் போன்ற லெக் ஸ்பின்னர் நமக்கு தேவைப்படுகிறார்”

- Advertisement -

“நாம் சஹாலை நீண்ட காலத்திற்கு முன்பாகவே கழற்றி விட்டோம். அவரை கடந்த சில வருடங்களாக நாம் மிஸ் செய்தோம் என்று நினைக்கிறேன். இந்த இடத்தில் தான் நாம் இன்னும் முன்னேறவில்லை என்று கருதுகிறேன். போதாக்குறைக்கு கடந்த சீசனில் அவர்கள் ஹசரங்காவையும் விடுவித்துள்ளார்கள். இந்த முடிவுகளின் பின்னணியில் அவர்கள் என்ன திட்டத்தை வைத்துள்ளார்கள் என்பது எனக்கு தெரியவில்லை”

இதையும் படிங்க: சச்சின் டெண்டுல்கரின் 14 ஆண்டுகால சாதனையை முறியடித்த வங்கதேச வீரர் சவுமியா சர்கார் – விவரம் இதோ

“ஆம் பெங்களூரு அணியில் தற்போது சில ஸ்பின்னர்கள் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் ரஷித் கான் போல 4 – 5 விக்கெட்களை எடுத்து துருப்புச் சீட்டாக செயல்படக்கூடியவர்களாக இல்லை. துரதிஷ்டவசமாக அவர் குஜராத் அணியில் நிலையான இடத்தை பிடித்து விட்டதால் ஏலத்தில் யாராலும் வாங்க முடியாது. ஆனால் வருங்காலங்களில் டிரேடிங் முறையில் அவரை பெங்களூரு வாங்க முயற்சிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் ரசித் கான் தற்போது டிரேடிங் செய்யும் நிலையில் இல்லை” என்று கூறினார்.

Advertisement