சச்சின் டெண்டுல்கரின் 14 ஆண்டுகால சாதனையை முறியடித்த வங்கதேச வீரர் சவுமியா சர்கார் – விவரம் இதோ

Soumya-and-Sachin
- Advertisement -

நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கெதிராக நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டியானது நேற்று டிசம்பர் 20-ஆம் தேதி நேற்று நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியின் டாசில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய வங்கதேச அணியானது துவக்கம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தாலும் வங்கதேச அணியின் துவக்க ஆட்டக்காரரான சௌமியா சர்க்காரின் மிகச் சிறப்பான ஆட்டம் காரணமாக அந்த அணி 49.5 ஓவர்களில் 291 ரன்கள் குவித்தது.

- Advertisement -

வங்கதேச அணி சார்பாக அதிகபட்சமாக அந்த அணியின் துவக்க வீரரான சௌமியா சர்க்கார் 151 பந்துகளை எதிர்கொண்டு 22 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 169 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார் அதனை தொடர்ந்து 292 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணியானது :

46.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 296 ரன்களை குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இருப்பினும் இந்த போட்டியில் வங்கதேச அணி சார்பாக துவக்க வீரராக களமிறங்கி விளையாடிய சௌமியா சர்க்கார் இந்திய அணியின் ஜாம்பவான சச்சின் டெண்டுல்கரின் 14 ஆண்டுகால சாதனை ஒன்றினை முறியடித்து அசத்தியுள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் அவர் படைத்த சாதனை யாதெனில் : கடந்த 2009-ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக நியூசிலாந்து மண்ணில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 163 ரன்கள் அடித்ததே நியூசிலாந்து மண்ணில் ஆசிய கண்டத்தை சேர்ந்த ஒரு வீரர் எடுத்த அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.

இதையும் படிங்க : ஐபிஎல் 2024 : ஏலத்துக்கு பின் பாண்டியா தலைமையில் புதிய வீரர்களை கொண்ட.. மும்பையின் உத்தேச பிளேயிங் லெவன்

இந்நிலையில் நேற்று சவுமியா சர்கார் அடித்த 169 ரன்கள் மூலம் சச்சின் டெண்டுல்கரின் வரலாற்று சாதனையை முறியடித்துள்ளார். மேலும் வங்கதேச அணி சார்பாக தனிப்பட்ட முறையில் அதிகபட்ச ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் சௌமியா சர்க்கார் இரண்டாம் இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் அந்த அணியை சேர்ந்த மற்றொரு துவக்க வீரரான லிட்டன் தாஸ் 176 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement