ஐபிஎல் 2024 : ஏலத்துக்கு பின் பாண்டியா தலைமையில் புதிய வீரர்களை கொண்ட.. மும்பையின் உத்தேச பிளேயிங் லெவன்

Hardik Pandya MI
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடர் கிரிக்கெட் தொடரின் ஏலம் நிறைவு பெற்றுள்ள நிலையில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் மும்பை இந்தியன்ஸ் வருங்காலத்தை கருத்தில் கொண்டு நிறைய அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது. குறிப்பாக 5 கோப்பைகளை வென்று ரோகித் சர்மாவை கழற்றி விட்ட அந்த அணி ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக வைத்து ஏலத்தில் தங்களுக்கு தேவையான சில வீரர்களையும் வாங்கியுள்ளது.

இதை தொடர்ந்து 2024 ஐபிஎல் தொடரில் 6வது கோப்பையை வெல்வதற்கு தகுதியான பாண்டியா தலைமையிலான 11 பேர் கொண்ட மும்பை அணியை பற்றி பார்ப்போம். என்ன தான் கேப்டனாக கழற்றி விடப்பட்டாலும் சமீபத்திய ஐபிஎல் தொடர்களில் சுமாராக செயல்பட்டாலும் ரோகித் சர்மா துவக்க வீரராக களமிறங்குவார் என்று நம்பலாம். இல்லையெனில் கேப்டனாக கழற்றி விட்டதற்காக இன்ஸ்டாகிராமில் 6 லட்சம் ரசிகர்கள் வெளியேறிய நிலையில் பிளேயிங் லெவனிலும் ரோகித் சர்மாவை புறக்கணித்தால் காலியான வான்கடே மைதானத்தில் விளையாட வேண்டிய நிலைமை ஏற்படும் என்பது மும்பை நிர்வாகத்திற்கு நன்றாக தெரியும்.

- Advertisement -

2வது துவக்க வீரராகவும் கீப்பராகவும் இசான் கிசான் விளையாடுவார் என்று நம்பப்படும் நிலையில் 3வது இடத்தில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ் சந்தேகமின்றி களமிறங்குவார். 4வது இடத்தில் கேப்டனாக ஹர்திக் பாண்டியா 5வது இடத்தில் இளம் வீரர் திலக் வர்மா ஆகியோர் களமிறக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக குஜராத்துக்காக ஃபினிஷராக விளையாடுவதை விட சற்று முன்கூட்டியே களமிறங்கி பாண்டியா பெரிய ரன்கள் எடுத்தார்.

எனவே அவர் 4வது இடத்தில் விளையாடுவார் என்று நம்பப்படும் நிலையில் 6வது இடத்தில் ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரர் டிம் டேவிட் ஃபினிஷராக செயல்படலாம். 7வது இடத்தில் புதிதாக வாங்கப்பட்ட ரோமாரியா செஃபார்ட் 8வது இடத்தில் ஏலத்தில் 5 கோடிக்கு வாங்கப்பட்ட தென்னாப்பிரிக்காவின் அதிரடி இளம் வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்சி விளையாட வாய்ப்புள்ளது.

- Advertisement -

9வது இடத்தில் ஸ்பின்னராக அனுபவமிகுந்த பியூஸ் சாவ்லா 10வது நம்பிக்கை நாயகன் பும்ரா ஆகியோருடன் 3வது வேகப்பந்து வீச்சாளராக ஆஸ்திரேலியாவின் ஜேசன் பெரன்ஃடாப் விளையாட வாய்ப்புள்ளது. அதே போல இம்பேக்ட் விதிமுறையை பயன்படுத்தி ஆப்கானிஸ்தானின் அனுபவ ஸ்பின்னர் முகமது நபி அல்லது குட்டி போன்ற ஏபிடி என்று பாராட்டப்படும் தென்னாப்பிரிக்காவின் தேவால்ட் ப்ரேவிஸ் விளையாடுவதற்கும் வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: உனக்கே திருப்தியளிக்காது.. திறமையை ஏன்பா வேஸ்ட் பண்ற.. சாய் சுதர்சனுக்கு லெஜெண்ட் கவாஸ்கர் அட்வைஸ்

ஐபிஎல் 2024 டி20 தொடரில் மும்பை அணியின் உத்தேச பிளேயிங் லெவன்: ரோகித் சர்மா, இசான் கிசான் (கீப்பர்), சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), திலக் வர்மா, டிம் டேவிட்*, ரோமாரியா செஃபார்ட்*, ஜெரால்ட் கோட்சி*, பியூஸ் சாவ்லா, ஜஸ்பிரித் பும்ரா, ஜேசன் பெரன்ஃடாப்*

Advertisement