உனக்கே திருப்தியளிக்காது.. திறமையை ஏன்பா வேஸ்ட் பண்ற.. சாய் சுதர்சனுக்கு லெஜெண்ட் கவாஸ்கர் அட்வைஸ்

Sunil Gavaskar 3
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று வரும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. ஆனால் 2வது போட்டியில் வென்ற தென்னாப்பிரிக்கா பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்துள்ளது. அதனால் 1 – 1 (3) என்ற கணக்கில் சமனில் இருக்கும் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 3வது போட்டி டிசம்பர் 21ஆம் தேதி இந்திய நேரடிப்படி மாலை 4.30 மணிக்கு பார்ல் நகரில் நடைபெறுகிறது.

முன்னதாக இந்த தொடரில் அறிமுகமான தமிழக வீரர் சாய் சுதர்சன் முதல் போட்டியிலேயே சிறப்பாக விளையாடி 55* ரன்கள் குவித்து இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினார். அதனால் அறிமுகப் போட்டியிலேயே அரை சதமடித்த 4வது இந்திய துவக்க வீரர் என்ற சாதனை படைத்த அவர் 2வது போட்டியில் மற்ற வீரர்களை காட்டிலும் அதிகபட்சமாக 62 ரன்கள் குவித்து வெற்றிக்கு போராடினார்.

- Advertisement -

கவாஸ்கர் அறிவுரை:
அதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் நவ்ஜோத் சித்துவுக்கு பின் 36 வருடங்கள் கழித்து தனது முதல் 2 போட்டிகளிலும் அரை சதமடித்த இந்திய வீரர் என்ற சாதனையும் அவர் படைத்தது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. இருப்பினும் 2வது போட்டியில் நன்கு செட்டிலாகி நல்ல துவக்கத்தை பெற்ற அவர் சதமடிப்பதற்கு கிடைத்த வாய்ப்பை தவற விட்டார்.

இந்நிலையில் தென்னாபிரிக்க மண்ணில் முதல் முறையாக விளையாடும் சாய் சுதர்சன் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்த அரை சதங்கள் அடிக்கும் அளவுக்கு நல்ல திறமை கொண்டிருப்பதாக ஜாம்பவான் கவாஸ்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். இருப்பினும் திறமையை கொண்டிருக்கும் அவருக்கு சதமடிக்காதது திருப்தியை கொடுத்திருக்காது என்று தெரிவிக்கும் கவாஸ்கர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஆம் அவர் பார்ப்பதற்கு நன்றாக விளையாடினார். கச்சிதமான வீரர்கள் எப்போதும் தங்களுடைய தலையை நேராக வைத்து உடம்புக்கு அருகே விளையாடுவார்கள். அந்த வகையில் அவர் விளையாடும் போது பேலன்ஸ் நன்றாக இருக்கிறது. பொதுவாக இடது கை பேட்ஸ்மேன்கள் அழகாக பேட்டிங் செய்யக் கூடியவர்கள். அவர்களால் ஃபுல் ஷாட்டையும் அடிக்க முடியும். அடிப்படையில் அவருடைய திறமை மற்றும் பொறுமை மிகவும் நன்றாக உள்ளது”

இதையும் படிங்க: அவரை மாதிரி ஒரு பிளேயரை குஜராத் டீம் கண்டுபிடிப்பது ரொம்ப கஷ்டம் – ஆஷிஷ் நெஹ்ரா வெளிப்படை

“இருப்பினும் இந்த நல்ல துவக்கத்தை நீங்கள் முன்னோக்கி செல்வதில் கொஞ்ச நேரம் மட்டுமே அவசியமாகும். இந்த ரன்களால் அவர் திருப்தியடைந்திருப்பார் என்று நான் நினைக்கவில்லை. ஏனெனில் நீங்கள் 50, 60 ரன்களில் அவுட்டாவதை விரும்ப மாட்டீர்கள். எனவே இந்த வாய்ப்பை அவர் பிடிக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். அப்படி செய்தால் தான் அனைவரும் சுதர்சனின் இடத்தைப் பற்றி பேசாமல் சுதர்சனுடன் களமிறங்கப் போகும் பார்ட்னர் யார் என்பதை பற்றி பேசுவார்கள்” என்று கூறினார்.

Advertisement