அவரை மாதிரி ஒரு பிளேயரை குஜராத் டீம் கண்டுபிடிப்பது ரொம்ப கஷ்டம் – ஆஷிஷ் நெஹ்ரா வெளிப்படை

Nehra
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது நடைபெற்று வருகிறது. இதுவரை 16 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள வேளையில் அடுத்ததாக 2024-ஆம் ஆண்டிற்கான 17-வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு கோடை காலத்தில் இந்தியாவில் நடைபெற இருக்கிறது. இந்த ஐ.பி.எல் தொடரானது தற்போதே ரசிகர்கள் மத்தியில் அதிகளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடருக்கு முன்பாக அனைத்து அணிகளும் தங்களது அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட வீரர்களின் பட்டியலை அறிவித்து அதன் பிறகு டிசம்பர் 19-ஆம் தேதி துபாயில் வீரர்களுக்கான மினி ஏலமும் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.

- Advertisement -

இந்த ஏலத்தில் 300-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்ட வேளையில் 70-க்கும் மேற்பட்ட வீரர்கள் மட்டுமே அனைத்து அணிகளாலும் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த ஏலத்திற்கு முன்னதாகவே குஜராத் அணியின் கேப்டனான ஹார்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி 15 கோடி குறித்து டிரேடிங் செய்து கொண்டது.

இதன் காரணமாக குஜராத் அணிக்கு புதிய கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து ஹார்திக் பாண்டியா வெளியேறிய குறித்தும், சுப்மன் கில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்தும் அந்த அணியின் தலைமை பயிற்சியாளரான ஆஷிஷ் நெஹ்ரா சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறுகையில் : குஜராத் அணியில் ஹார்டிக் பாண்டியா போன்ற ஒரு திறமையும், அனுபவமும் வாய்ந்த ஆல்ரவுண்டரை கண்டறிவது மிகவும் கடினம். இருப்பினும் தற்போது கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள சுப்மன் கில் கடந்த சில ஆண்டுகளாகவே தன்னை மேம்படுத்தி நிரூபித்து வருகிறார்.

இதையும் படிங்க : ஐபிஎல் 2024 ஏலத்தில் சிஎஸ்கே வேற லெவல் பண்ணிட்டாங்க.. மற்ற அணிகள் பாக்கணும்.. சைமன் டௌல் பாராட்டு

மேலும் வெற்றி தோல்வி பற்றி கவலைப்படாமல் சுப்மன் கில் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு மிகப்பெரிய பொறுப்பை அணி நிர்வாகம் வழங்கி உள்ளது. அதனை அவர் சிறப்பாக செய்து காண்பிப்பார் என்று ஆஷிஷ் நெஹ்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement