வெறும் 100 ரூபாய் இருந்தா போதும். தமிழக ரசிகர்களை திக்கு முக்காட வைத்த – டி.என்.பி.எல் அறிவிப்பு

TNPL
- Advertisement -

இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களின் முக்கிய நகரங்களை தலைமையாகக் கொண்டு ஆண்டுதோறும் ஐபிஎல் தொடர் போட்டிகள் நடத்தப்பட்டு வருவதை போல தமிழ்நாட்டில் உள்ளூர் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு ஆண்டு தோறும் டி.என்.பி.எல் போட்டிகள் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் இந்த ஆண்டு ஆறாவது சீசனுக்கான டிஎன்பிஎல் தொடர் வருகிற 23ஆம் தேதி தொடங்கி ஜூலை 31ஆம் தேதி வரை நடைபெறும் என்று ஏற்கனவே அதிகாரபூர்வ அட்டவணை வெளியாகியிருந்தது.

tnpl 1

அதன்படி டிஎன்பிஎல் தொடரானது துவங்க இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் தற்போது இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தைத் தொட்டுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்த ஆறாவது தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரானது இம்முறை சென்னையில் நடத்தப்படாமல் திண்டுக்கல், கோவை, நெல்லை மற்றும் சேலம் ஆகிய 4 இடங்களில் நடைபெற இருக்கிறது.

- Advertisement -

இந்த தொடரின் முதலாவது லீக் போட்டி வருகிற ஜூன் 23-ஆம் தேதி இரவு 7 15 மணிக்கு நெல்லை சங்கர் நகர் இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் துவங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சேப்பாக் சூப்பர் கிங்ஸ் மற்றும் நெல்லை கிங்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.

tnpl

இந்நிலையில் இந்த தொடருக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் உள்ளாக்கியுள்ளது டிஎன்பிஎல் கிரிக்கெட் நிர்வாகம். அதன்படி இம்முறை நடைபெறவுள்ள டி.என்.பி.எல் டிக்கெட் விலை விவரம் தற்போது வெளியாகியுள்ளது. போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை ஒன்பது முப்பது மணி முதல் பகல் ஒரு மணி வரையும், பிற்பகல் 3 முதல் 6 மணி வரையும் சங்கர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

- Advertisement -

அதில் ஒரு டிக்கெட்டின் விலை 100 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் மத்தியில் இந்த ஒரு அறிவிப்பு பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் தமிழக அளவில் சிறப்பாக செயல்படும் கிரிக்கெட் வீரர்களை கொண்டு நடத்தப்படும் இந்த தொடருக்கான போட்டிகள் வெறும் நூறு ரூபாயில் ரசிகர்கள் காணும் அளவிற்கு வசதியை ஏற்படுத்தி உள்ளதால் தற்போது இந்த டிக்கெட் விலை ரசிகர்களை மகிழ்ச்சியில் உள்ளாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் 3 ஆவது வேகப்பந்து வீச்சாளராக இவரே ஆடனும் – வாசிம் ஜாபர் கருத்து

ஏற்கனவே இந்த டி.என்.பி.எல் தொடரின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த பல வீரர்கள் ஐ.பி.எல் தொடரில் விளையாடி வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டும் பல இளம் வீரர்கள் இந்த டி.என்.பி.எல் தொடரின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்க்க காத்திருக்கின்றனர்.

Advertisement