டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் 3 ஆவது வேகப்பந்து வீச்சாளராக இவரே ஆடனும் – வாசிம் ஜாபர் கருத்து

- Advertisement -

ஆஸ்திரேலிய மண்ணில் இந்த ஆண்டு இறுதியில் டி20 உலகக் கோப்பை தொடரானது நடைபெற உள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றுப் போட்டிகளின் முடிவிலேயே தோல்வியை சந்தித்து அந்த தொடரில் இருந்து வெளியேறியதால் இம்முறை கட்டாயம் கோப்பையை கைப்பற்ற வேண்டிய உத்வேகத்துடன் இந்திய அணி இந்த தொடரை அணுக உள்ளது. ஏற்கனவே ஐபிஎல் தொடர் முடிந்து சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் தற்போது இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியே டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது.

Avesh-Khan

அதே வேளையில் சீனியர் வீரர்களையும் வைத்து இந்திய அணி பலமான ஒரு அணியை தயாரிக்க தீவிர பரிசோதனை நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில் பந்து வீச்சாளர்களை பொருத்தவரை தற்போது யாரை தேர்வு செய்ய போகிறோம் என்கிற நிலையே உள்ளது.

- Advertisement -

அந்த அளவிற்கு அணியில் அதிகளவு பந்து வீச்சாளர்கள் இருப்பதால் எந்தெந்த பவுலர்கள் இந்த தொடரில் இடம் பெறப் போகிறார்கள் என்பது குறித்த எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. அந்த வகையில் ஏற்கனவே இந்த தொடரில் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக பும்ரா செயல்படுவார் என்று கூறப்படும் நிலையில் அவருடன் இரண்டாவது வேகப்பந்து வீச்சாளராக ஹர்ஷல் படேல் விளையாடுவார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

bhuvi 1

இந்நிலையில் இந்திய அணியின் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக விளையாடுவதற்கு புவனேஷ்வர் குமார் தற்போது போதுமானதை விட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : தென் ஆப்பிரிக்கா தொடர் முழுவதும் பந்து வீசிய விதத்தைப் பார்க்கும் போது டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக புவனேஸ்வர் குமார் உறுதிப்படுத்திக் கொண்டார் என்று நினைக்கிறேன்.

- Advertisement -

எனது புத்தகத்தில் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் முதல் இரண்டு இடத்தில் உள்ளனர். புவனேஸ்வர் குமார் நிச்சயமாக எனது கருத்துப்படி மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருப்பார். டி20 தொடரில் யாரையாவது கேப்டனாக நியமிக்க வேண்டும் என்னும் பட்சத்தில் ரோகித் சர்மா இல்லையென்றால் நான் ஹர்திக் பாண்ட்யாவை தான் கேப்டனாக நியமிக்க வேண்டும் என வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : என்றுமே அவர்தான் சிறந்த பினிஷர் – இந்திய நட்சத்திரத்தை பாராட்டி பினிஷிங் ரகசியத்தை கூறிய மைக்கேல் பெவன்

ஏற்கனவே ஐ.பி.எல் தொடர் முடிந்து ஓய்வில் இருந்த ரோஹித் சர்மா தற்போது இங்கிலாந்து தொடரில் பங்கேற்க முதன்மை வீரர்களை கொண்ட அணியுடன் இங்கிலாந்து பறந்துள்ளார். அந்த ஒரு டெஸ்ட் போட்டி முடிந்ததும் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் இந்திய அணி பங்கேற்று விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement