TNPL 2022 : இறுதிப்போட்டியில் கோப்பையை இரண்டு அணிகளும் பகிர்ந்துகொள்ள காரணம் என்ன? – ரூல்ஸ் கூறுவது என்ன?

TNPL-Final
- Advertisement -

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் டி.என்.பி.எல் தொடரானது இந்த ஆண்டும் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. கடந்த சில வாரங்களாகவே மிகச் சிறப்பான வகையில் நடைபெற்ற தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் நடப்பு சீசனுக்கான இறுதிப் போட்டி நேற்று கோவை நகரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. ஆனால் இந்த போட்டி முழுவதுமாக நடைபெறாமல் மழையின் குறுக்கீடு காரணமாக கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டு சேப்பாக் சூப்பர் கில்லிஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் ஆகிய இரு அணிகளும் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டு கோப்பை பகிர்ந்து அளிக்கப்பட்டது.

CSG vs LKK

- Advertisement -

இதன் மூலம் டிஎன்பிஎல் வரலாற்றில் முதன்முறையாக இரண்டு அணிகள் கோப்பையை பகிர்ந்தது இதுவே முதன் முறையாக அமைந்தது. முன்னதாக நேற்று நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியின் போது மழையின் குறுக்கீடு காரணமாக போட்டி 17 ஓவராக குறைக்கப்பட்டது. அப்படி இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லைக்கா கோவை கிங்ஸ் அணி 17 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்களை குவித்தது.

பின்னர் 139 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் அணி விளையாட துவங்கிய போது துவக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து நான்கு ஓவர்களின் முடிவு 2 விக்கெடுகளை இழந்து 14 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அந்த நேரத்தில் மழை பெய்ததால் கோவை அணியின் வெற்றி வாய்ப்பும் மழையின் குறுக்கீடு காரணமாக பறிபோனது.

TNPL Trophy

ஒருவேளை போட்டி முழுவதுமாக நடைபெற்று இருந்தால் கோவை அணி வெற்றி பெற்றிருக்கவும் வாய்ப்பு இருந்தது. அதேபோன்று போட்டியின் முடிவில் பேசிய கோவை அணியின் கேப்டன் ஷாருக் கான் கூறும் போது கூட : மழையின் குறுக்கீடு காரணமாக இந்த போட்டியின் வெற்றி எங்களிடம் இருந்து சென்று விட்டது. ஒருவேளை போட்டி முழுவதுமாக நடந்திருந்தால் வெற்றி எங்கள் வசம் ஆகியிருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.

- Advertisement -

இப்படி மழையின் குறுக்கீடு காரணமாக போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது குறித்தும், இரு அணிகளும் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டது குறித்தும், அதன் பின்னால் உள்ள விதிமுறைகளை இங்கு காண்போம். அதன்படி டி.என்.பி.எல் விதிமுறைகளின் படி 17 ஓவர்கள் கொண்ட இந்த போட்டி முதல் இன்னிங்ஸ் நடைபெற்று முடிந்த வேளையில் இரண்டாவது இன்னிங்ஸ் ஆனது ஐந்து ஓவர் வரை நடைபெற்றால் மட்டுமே கணக்கில் டக் வொர்த் லூயிஸ் முறை கணக்கில் கொள்ளப்படும்.

இதையும் படிங்க : 37 வயதிலும் அசத்தும் தினேஷ் கார்த்திக்கின் ரகசியம் இதுதான் – அவரது வழியை விராட் கோலி பின்பற்ற கோரும் ரசிகர்கள்

ஆனால் போட்டி நேற்று நான்கு ஓவர்களிலேயே கைவிடப்பட்டதால் இரு அணிகளுமே வெற்றியாளராக அறிவிக்கப்பட்டது. ஒருவேளை ஐந்து ஓவர்கள் வரை போட்டி நடைபெற்று இருந்தால் நிச்சயம் கோவை அணியே நிலவரப்படி வெற்றி பெற்ற அணியாக அறிவிக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement