ஷாருக்கான் எடுத்த அந்த புதுமுடிவு தான். இந்திய அணியில் இடம்கிடைக்க காரணமா? – ரசிகர்கள் மகிழ்ச்சி

Shahrukh
- Advertisement -

தமிழகத்தைச் சேர்ந்த இளம் அதிரடி ஆட்டக்காரரான ஷாருக்கான் கடந்த ஐபிஎல் தொடரின்போது பஞ்சாப் அணிக்காக அறிமுகமாகி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 26 வயதான ஷாருக்கான் டிஎன்பிஎல்-லும் தனது அதிரடிக்கு பெயர் போனவர். அதுமட்டுமின்றி சமீபத்தில் நடைபெற்று முடிந்த சையத் முஷ்டாக் அலி தொடர் மற்றும் விஜய் ஹசாரே கோப்பை என தமிழ்நாடு அணிக்கு முக்கிய வீரராக திகழ்ந்து வரும் ஷாருக்கான் தனது அதிரடியான பேட்டிங்கின் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்து வருகிறார்.

sharukh 1

- Advertisement -

இப்படி தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வரும் இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற உள்ள தொடரில் முதல் முறையாக ஷாருக்கானுக்கு இந்திய அணியில் ஸ்டான்ட் பை வீரராக இடம் கிடைத்துள்ளது.

தற்போது உள்ள இந்திய அணியின் பின்வரிசையில் களமிறங்கி அதிரடியாக விளையாடும் திறன் கொண்ட ஷாருக்கான் நிச்சயம் இந்திய அணியில் விளையாடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த வேளையில் தற்போது ஸ்டான்ட் பை வீரராக அவருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. இந்நிலையில் இப்படி ஷாருக் கானுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்க என்ன காரணம் என்பது குறித்து ரசிகர்கள் சில கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

sharukh

அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஷாருக்கான் தான் பந்துவீசி பயிற்சி எடுப்பது போன்ற ஒரு வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். இதனை கண்ட ரசிகர்கள் வெறும் பேட்ஸ்மேனாக இருந்தால் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாது என்பதனால் ஷாருக் கான் இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்று கூறி அவரின் இந்த முடிவால் தான் தற்போது இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்ததாகவும் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர்.

- Advertisement -

இதையும் படிங்க : எனக்கும் சைமண்ட்ஸ்க்கும் நடந்த அந்த சண்டை இதனால் வந்தது தான் – 14 ஆண்டு கதையை சொன்ன ஹர்பஜன்

இந்திய அணியில் தற்போது ஏகப்பட்ட பேட்ஸ்மேன்கள் இருப்பதனால் பந்து வீச தெரிந்த ஒரு பேட்ஸ்மேனாக இருந்தால் நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என்கிற காரணத்தினால் ஷாருக் கான் தற்போது பந்து வீசி பயிற்சி செய்து வருவது நல்லதுதான் என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement