எனக்கும் சைமண்ட்ஸ்க்கும் நடந்த அந்த சண்டை இதனால் வந்தது தான் – 14 ஆண்டு கதையை சொன்ன ஹர்பஜன்

- Advertisement -

ரசிகர்களை மகிழ்விக்கும் ஒரு விளையாட்டாக இருக்கும் கிரிக்கெட்டில் எப்போதும் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. ஒரு சில சர்ச்சைகள் சிறிய அளவில் ஏற்பட்டு காலத்தின் சுழற்சியால் காணாமல் போய்விடும். ஆனால் ஒரு சில சர்ச்சைகள் காலத்தால் அழிக்க முடியாத மோசமான வடுவாகிவிடும். அந்த வகையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கின் வாழ்நாளில் மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் வரலாற்றில் காலத்தால் அழிக்க முடியாத ஒரு மிகப் பெரிய சர்ச்சை என்றால் அது “மங்கிகேட்” சர்ச்சையாகும்.

harbhajan 1

- Advertisement -

மங்கிகேட் ஹர்பஜன் – சைமன்ஸ் :
கடந்த 2008 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி அங்கு அணிக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அந்த தொடரில் புகழ்பெற்ற சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் சுழல் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் மற்றும் ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் ஆகியோரிடையே வார்த்தை போர் நிலவியது.

அந்த போட்டி நாளன்று ஹர்பஜன்சிங் தம்மை “குரங்கு” என திட்டியதாக ஆன்ட்ரூ சைமன்ஸ் புகார் தெரிவித்திருந்தார். அதை தொடர்ந்து அந்த போட்டி முடிந்த பின்னர் அதை பற்றி விசாரித்த போட்டி நடுவர்கள் ஐசிசியிடம் முழு விவரத்தை தெரிவித்தார்கள்.

harbhajan 2

அதில் ஹர்பஜன்சிங் திட்டியது உண்மையான கண்டறியப்பட்டதால் அவருக்கு 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஐசிசி அதிரடியாக தடை விதித்தது. ஆனால் அந்த தடையை நீக்காவிட்டால் நாங்கள் அந்த டெஸ்ட் தொடரை ரத்து செய்து விட்டு நாடு திரும்புகிறோம் என ஹர்பஜன் சிங்கிற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ஆதரவு அளித்ததால் வேறு வழியின்றி அந்த தடை திரும்ப பெறபட்டது.

- Advertisement -

உண்மையில் நடந்தது என்ன:
இந்நிலையில் அந்த சமயத்தில் ஆண்ட்ரூ சைமன்ட்சை அந்த வார்த்தையை பயன்படுத்தி திட்டவில்லை எனவும் ஒரு சில இந்தி கெட்ட வார்த்தைகளில் திட்டியதாகவும் ஆனால் அதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் தவறாக புரிந்து கொண்டதாகவும் ஹர்பஜன் சிங் தற்போது தெரிவித்துள்ளார். இதுபற்றி இந்திய கிரிக்கெட் வல்லுனர் “போரியா மஜும்தார்” உடன் நேற்று அவர் பங்கேற்ற உரையாடல் நிகழ்ச்சியில் மனம் திறந்து பேசுகையில்,

harbhajan 3

“எதனால் இது நடக்கிறது என புரியாமல் அந்த சமயத்தில் மிகுந்த தொந்தரவுக்கு உள்ளானேன். நடக்காத ஒரு விஷயத்திற்கு ஏன் இவ்வளவு பெரிய சர்ச்சை ஏற்பட்டது என தவித்தேன். அவர்கள் நான் பேசாத ஒன்றுக்கு 6 – 7 சாட்சிகளை வைத்திருந்தார்கள். களத்தில் விளையாடும் போது, “உனது தலையில் விதைகள் உள்ளது” என என்னை பார்த்து அவர்கள் கூறினார்கள். என் மதத்தை கேலி செய்வது போன்ற வார்த்தைகளை கேட்டது எனக்கு மிகப்பெரிய வேதனையாக இருந்தது. அந்த சமயத்தில் இது பற்றி நான் எதுவும் கூறவில்லை. ஏனெனில் நான் அதுபற்றி கூறியிருந்தால் அது மேலும் பல சர்ச்சைகளை உண்டாக்கி இருக்கும்”

- Advertisement -

என தெரிவித்த ஹர்பஜன்சிங் கூறாத ஒரு வார்த்தைக்காக தாம் சர்ச்சையில் சிக்கியதாக உண்மையை இவ்வளவு ஆண்டுகள் கழித்து கூறியுள்ளார். அத்துடன் தனது மதத்தை பற்றி ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கிண்டல் அடித்ததன் காரணமாகவே ஒரு சில இந்தி கெட்ட வார்த்தைகளை பயன்படுத்த நேரிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : சர்ப்ரைஸ் ஆஃபர் வழங்கிய பி.சி.சி.ஐ – எனக்கு உங்க சலுகையை வேணாம் – மறுத்த விராட் கோலி

கடினமான தருணம்:
“அந்த மோசமான நேரத்தை எப்படி எனது அறையில் கடினத்துடன் கடந்தேன் என்பது பற்றி எனக்கு தான் தெரியும். அந்த தருணம் பற்றி சக அணி வீரர்களிடம் நான் எதுவும் பேசவில்லை. ஏனெனில் அவர்கள் எனக்கு எப்போதும் ஆதரவாக இருந்தனர். மேலும் எனக்கு ஏற்பட்ட மன அழுத்தம் அவர்களுக்கும் ஏற்பட வேண்டாம் என நினைத்தேன். அதன்பின் அந்த தருணத்தில் இந்தியாவுக்காக ஆஸ்திரேலிய மண்ணில் மீண்டும் விளையாடினேன்” என்று கூறினார்.

Advertisement