- Advertisement -
இந்திய கிரிக்கெட்

10 வருஷமாகியும் வாழ்வா – சாவா நிலையா? சாம்சனுக்கு எப்போ தான் இதை செய்வீங்க.. முன்னாள் வீரர் ஆதங்கம்

இலங்கைக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. அதில் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்றுள்ள இந்தியா 2 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியுள்ளது. முன்னதாக கேரளாவைச் சேர்ந்த சஞ்சு சாம்சன் 2015இல் இந்தியாவுக்காக அறிமுகமாகி இதுவரை வெறும் 29 டி20, 16 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.

கிட்டத்தட்ட 10 வருடங்களாகியும் அவருக்கு இதுவரை இந்திய அணியில் தொடர்ந்து 10 போட்டிகளில் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது உண்மையாகும். குறிப்பாக தனது கடைசி ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க மண்ணில் சதமடித்த சஞ்சு சாம்சன் இந்தியாவை வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருது வென்றார். ஆனால் அடுத்து நடைபெறும் இலங்கை ஒருநாள் தொடரில் சாம்சன் கழற்றி விடப்பட்டுள்ளார்.

- Advertisement -

10 வருடங்கள் கடந்தும்:
அதே சமயம் இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியில் டக் அவுட்டானது போல தமக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் அவர் பயன்படுத்துவதில்லை என்பதும் உண்மையாகும். அதனால் சஞ்சு சாம்சன் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்துவதில்லை என்று ஆதரவளிக்கும் ரசிகர்களே அவ்வப்போது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.

இந்நிலையில் சஞ்சு சாம்சனுக்கு 10 வருடங்களாகியும் வாழ்வா – சாவா என்ற வாய்ப்புகள் தான் வழங்கப்படுவதாக முன்னாள் இந்திய வீரர் டினு யோகன்னன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “10 வருடங்களுக்கு முன்பாக அறிமுகமான சாம்சன் இந்திய அணியில் உள்ளேயும் வெளியேவுமாக இருந்து வருகிறார்”

- Advertisement -

“அவருக்கு மட்டும் ஒவ்வொரு போட்டியும் வாழ்வா – சாவா என்பது போல் உள்ளது. கிட்டத்தட்ட அனைத்து போட்டியிலும் அவர் அழுத்தமான சூழ்நிலையிலேயே பேட்டிங் செய்ய செல்கிறார். எனவே அவருக்கு நீண்டகால வாய்ப்பும் ஆதரவும் கொடுக்க வேண்டும். ராஜஸ்தான் அணியில் அவர் தன்னுடைய வேலையை அறிவார். எனவே அதில் சுமாராக விளையாடினாலும் பிரச்சனையில்லை என்பது அவருக்கு தெரியும்”

இதையும் படிங்க: ஐபிஎல் 2025 தொடரில் தோனி விளையாடுவது பிசிசிஐ கையில் தான் இருக்கு.. வெளியான சோகமான தகவல்

“ஆனால் இந்திய அணியில் அவருக்கு நீண்ட போட்டிகளில் தொடர்ந்து வாய்ப்பு கிடைப்பது கடினம். ரிஷப் பண்ட் வந்துள்ளதால் அது இன்னும் கடினமாகியுள்ளது. இருப்பினும் ஏதோ ஒரு தருணத்தில் சஞ்சுவுக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும். தனது கடைசி ஒருநாள் போட்டியில் சதமடித்த அவருக்கு இந்தியா அடுத்ததாக விளையாடும் ஒருநாள் தொடரில் இடம் கிடைக்கவில்லை. இருப்பினும் எதைப் பற்றியும் சிந்திக்காமல் ஒரு நேரத்தில் ஒரு போட்டியில் விளையாட வேண்டிய நிலையில் அவர் இருக்கிறார்” என்று கூறினார்.

- Advertisement -
Published by