போட்டியோட இந்த ரிசல்ட் எனக்கு கஷ்டமா தான் இருக்கு. இருந்தாலும் – தோல்விக்கு பிறகு டிம் சவுதி பேசியது என்ன?

Tim-Southee
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே கடந்த 18-ஆம் தேதி துவங்கிய மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நேற்று நேப்பியர் நகரில் நடைபெற்ற மூன்றாவது போட்டியுடன் முடிவுக்கு வந்தது. இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முடிந்த இரண்டு போட்டிகளின் முடிவில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்த வேளையில் நேற்றைய போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று இருந்தால் தொடரை சமன் செய்திருக்க வாய்ப்பு இருந்தது.

IND vs NZ

- Advertisement -

ஆனால் நேற்றைய போட்டியில் கேன் வில்லியம்சன் மருத்துவ ஆலோசனை காரணமாக அணியில் விலகியதால் டிம் சவுதி தலைமையிலான நியூசிலாந்து அணி இந்திய அணிக்கு எதிரான இந்த போட்டியில் மோதியது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்புடன் பேட்டிங் செய்து விளையாடிய நியூசிலாந்து அணியானது 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 160 ரன்கள் குவித்தது.

பின்னர் 161 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது ஒன்பது ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 75 ரன்கள் எடுத்திருந்த வேளையில் மழை பெய்ததன் காரணமாக போட்டி அத்துடன் முடிவுக்கு வந்தது. நீண்ட நேரம் ஆகியும் மழை நிக்காத காரணத்தினால் போட்டி டக் வொர்த் லூயிஸ் முறைப்படி “டை” ஆனது இன்னும் ஒரு ரன்கள் குறைவாக இருந்திருந்தால் கூட நியூசிலாந்து அணி வெற்றி பெற்றிருக்கும் என்ற வேளையில் இரண்டு அணிகளுமே 9 ஓவர்களின் முடிவில் சரியான ரன் கணக்கில் இருந்ததால் போட்டி சமநிலையில் முடிந்தது.

INDia Hardik pandya

இதன்காரணமாக இந்திய அணி இந்த தொடரை (1-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டன் டிம் சவுதி கூறுகையில் : இந்த போட்டியில் நாங்கள் பேட்டிங்கில் செயல்பட்ட விதம் சற்று ஏமாற்றத்தை அளிக்கிறது. ஏனெனில் முதல் பாதியில் அதிரடியாக விளையாடிய நாங்கள் இன்னும் கூடுதலாக ரன்களை குவித்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

- Advertisement -

அதே போன்று இந்திய அணியின் டாப் ஆர்டரை விரைவிலேயே வீழ்த்தினால் நிச்சயம் எங்களால் போட்டியில் வெற்றி பெற முடியும் என்று நினைத்தோம். அந்த வகையில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் கிடைத்தும் வானிலை நமக்கு சாதகமாக அமையாததில் மிகவும் வருத்தம் தான். இது போன்ற சுவாரசியமான போட்டியில் மழை பெய்து போட்டி “டை” ஆனது சற்று வருத்தமாக தான் இருக்கிறது.

இதையும் படிங்க : இதோடு போதும். நான் உடனடியா நாடு திரும்புகிறேன். வெற்றிக்கு பிறகு – ஹார்டிக் பாண்டியா பேசியது என்ன?

ஒருவேளை மழை பெய்யாமல் இருந்திருந்தால் இந்த போட்டியில் ஏதாவது ஒரு அணிக்கு ரிசல்ட் கிடைத்திருக்கும் இருந்தாலும் இந்த போட்டி இரு அணிகளுக்குமே மிகச் சிறப்பாக அமைந்தது. எதிர்வரும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா போன்ற குவாலிட்டியான அணிக்கு எதிராக விளையாட ஆவலுடன் காத்திருக்கிறோம். நிச்சயம் ஆக்லாந்திலும் ரசிகர்களின் ஆதரவு எங்களுக்கு தொடரும் என நினைப்பதாக டிம் சவுதி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement