இதோடு போதும். நான் உடனடியா நாடு திரும்புகிறேன். வெற்றிக்கு பிறகு – ஹார்டிக் பாண்டியா பேசியது என்ன?

Hardik-Pandya
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நேற்று நேப்பியர் நகரில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதிப் போட்டியுடன் முடிவுக்கு வந்தது. ஏற்கனவே இந்த தொடரின் முதலாவது போட்டியில் மழை காரணமாக கைவிடப்பட்ட வேளையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

- Advertisement -

அதனை தொடர்ந்து நேற்று இவ்விரு அணிகளுக்கும் இடையே நேப்பியரில் நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணியானது 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 160 ரன்களை குவித்தது. பின்னர் 161 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 9 ஓவர்களின் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 75 ரன்கள் குவித்து இருந்தது.

அப்போது போட்டியின் இடையே மழை பெய்ததன் காரணமாக மீண்டும் போட்டியை தொடர முடியாமல் போனது. அதன் பின்னர் டக் வொர்த் லூயிஸ் முறைப்படி இரு அணிகளும் சமநிலையில் இருந்ததால் போட்டி “டை” என்று அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக இந்திய அணி இந்த தொடரை ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து இந்த கடைசி ஆட்டம் குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா கூறுகையில் : இந்த போட்டியில் கடைசி ஓவர் வரை விளையாடி வெற்றி பெறவே நான் நினைத்தேன். ஆனால் மழை காரணமாக அது முடியாமல் போனது. இந்த மைதானத்தில் தடுப்பாட்டத்தை விட அதிரடி ஆட்டம் கை கொடுக்கும் என்று நினைத்தேன்.

- Advertisement -

அந்த வகையில் தான் நான் இரண்டு விக்கெட் விழுந்தாலும் பரவாயில்லை என்று 10 முதல் 15 ரன்கள் கூடுதலாக அடித்து வந்தேன். இந்த போட்டியில் எங்களுக்கு வெற்றி பெற நல்ல வாய்ப்பு இருந்தும் வானிலை அதற்கு கை கொடுக்கவில்லை. இது போன்ற கிரிக்கெட் போட்டிகளின் போது இயற்கை சூழலை நாம் கட்டுப்படுத்த முடியாது.

இதையும் படிங்க : நியூஸிலாந்தில் பறக்கும் இந்திய கொடி – நியூஸிலாந்து மண்ணில் அதன் சாதனையை தகர்த்து இந்தியா படைத்த புதிய வரலாற்று சாதனை

இந்த ஆட்டம் முடிந்த கையோடு நான் தற்போது உடனடியாக நாடு திரும்பி என்னுடைய மகனுடன் நேரத்தை செலவிட இருக்கிறேன் என ஹார்டிக் பாண்டியா கூறினார். நடைபெற்று முடிந்த இந்த டி20 தொடரை தொடர்ந்து நடக்கவிருக்கும் ஒருநாள் தொடரில் ஹார்டிக் பாண்டியாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement