- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சுப்மன் கில் மசாஜ் எடுத்ததை விடவா மோசம்? இந்திய அணிக்கு இங்கிலாந்து கோச் சௌதீ பதிலடி

இந்திய கிரிக்கெட் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடும் 3வது டெஸ்ட் போட்டியில் லண்டனில் இருக்கும் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஜூலை 10ஆம் தேதி துவங்கிய அப்போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 387 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 104 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அடுத்து விளையாடிய இந்தியாவும் சரியாக 387 ரன்கள் எடுத்ததால் ஸ்கோர் சமநிலைப் பெற்றது. அதிகபட்சமாக கேஎல் ராகுல் 100, ரிஷப் பண்ட் 74, ஜடேஜா 72 ரன்களை எடுத்த நிலையில் இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக கிறிஸ் ஓக்ஸ் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்ததாக களமிறங்கிய இங்கிலாந்து 3வது நாள் முடிவில் 2/0 ரன்கள் எடுத்துள்ளது.

- Advertisement -

மசாஜ் எடுத்த கில்:

முன்னதாக 3வது நாள் முடிவில் இந்தியாவின் ஆட்டம் முடிந்த பின் 2, 3 ஓவர்கள் வீசுவதற்கான நேரம் மட்டுமே எஞ்சியிருந்தது. அப்போது முதல் ஓவரை வீசிய ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு எதிராக ஜாக் கிராவ்லி வேண்டுமென்றே நேரத்தை வீணடிக்கும் வகையில் நடந்து கொண்டார். குறிப்பாக மைதானத்தில் நேராக இருக்கும் பகுதியில் ரசிகர்களின் பிம்பம் தொல்லை செய்வதாக சொல்லி அவர் நகர்ந்து சென்றது பும்ராவை கடுப்பேற்றியது.

அடுத்த சில பந்துகளில் கையில் லேசாக பந்து பட்டது. உடனே அதிகமாக காயமடைந்தது போல் வெளிப்படுத்திய கிராவ்லி இங்கிலாந்து அணியின் மருத்துவரை வரவழைத்து நேரத்தை வீணடித்தார். அதனால் கோபமடைந்த இந்திய கேப்டன் சுப்மன் கில் சில மோசமான வார்த்தைகளை சொல்லி அவரிடம் மோதினார். அதே போல இந்திய வீரர்களும் இங்கிலாந்து வீரர்களை சுற்றி வளைத்து கோபத்தை வெளிப்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

- Advertisement -

சௌதீ பதிலடி:

இந்நிலையில் சுப்மன் கில் நேற்று பேட்டிங் செய்கையில் ஒரு சமயத்தில் குப்புறப்படுத்து மசாஜ் செய்வது போல் நேரத்தை வீணடித்ததாக இங்கிலாந்து பவுலிங் பயிற்சியாளர் டிம் சௌதீ தெரிவித்துள்ளார். அதை விட தாங்கள் செய்தது மோசமில்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. "இரு அணிகளும் நாளின் இறுதியில் அப்படி மோதியது சுவாரசியத்தை உண்டாக்கியது. இந்தியா எதை புகார் செய்கிறார்கள் என்று எனக்கு உறுதியாக தெரியவில்லை"

இதையும் படிங்க: அவரை மாதிரி ஒரு ராத்திரியா வெய்ட் பண்ண போறீங்க? பண்ட்டை ரன் அவுட்டாக்கிய ராகுலை.. சாடிய கும்ப்ளே

"ஏனெனில் நேற்று களத்தில் கில் மசாஜ் எடுத்துக்கொண்டார். நாளின் இறுதி நேரம் நெருங்கும் போது அப்படி செய்வது விளையாட்டின் அங்கம். 3வது நாள் முடிந்த விதம் சுவாரசியத்தைக் கொடுத்தது. இரு அணிகளும் நல்ல கிரிக்கெட்டை நேர்மைத் தன்மையுடன் விளையாடின. 3 நாட்கள் தாண்டிய பின்பும் அவர்களிடம் எனர்ஜி இருப்பதைப் பார்ப்பது நன்றாக உள்ளது. வெப்பமான வானிலை, பந்து மாற்றம், ரிவியூ போன்றவற்றால் 2 அணிகளாலும் 90 ஓவர்களை வீச முடியவில்லை" என கூறினார்.

- Advertisement -