இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. அத்தொடரின் 3வது போட்டியில் லண்டனில் இருக்கும் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூலை 10ஆம் தேதி துவங்கியது. அப்போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 387 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 104 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அடுத்து விளையாடிய இந்தியாவுக்கு ஜெய்ஸ்வால் 8, கருண் நாயர் 40 ரன்னில் விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் மறுபுறம் கேஎல் ராகுல் நிதானமாக விளையாடி அரை சதத்தை கடந்தார். எதிர்ப்புறம் வந்த கேப்டன் கில் 16 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தப் போதிலும் ரிஷப் பண்ட் காயத்தையும் பொருட்படுத்தாமல் நங்கூரமாக விளையாடினார்.
அவுட்டாக்கி விட்ட ராகுல்:
சமயம் கிடைக்கும் போதெல்லாம் அதிரடியாக விளையாடிய அவர் 141 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அரை சதத்தை கடந்தார். மறுபுறம் சதத்தை நெருங்கிய ராகுல் 3வது நாளின் கடைசி ஓவரின் முதல் பந்தில் பவுண்டரியுடன் 100 ரன்கள் அடிக்க முயற்சித்து தவற விட்டார் 3வது பந்தை எதிர்கொண்டு தட்டி விட்ட ரிஷப் பண்ட் சிங்கிள் எடுக்க ஒரு நொடி யோசித்தார். மறுபுறம் ராகுல் ஓடத் துவங்கியதால் சரி அவர் சதத்தை அடிக்க உதவி செய்வோம் என்று பண்ட்டும் ஓடினார்.
அதற்கிடையே பந்தை எடுத்த ஸ்டோக்ஸ் 78 ரன்னில் பண்ட்டை அவுட்டாக்கியது இந்திய அணிக்கு முன்னிலை பெறுவதில் பெரிய பின்னடைவாக அமைந்தது. இந்நிலையில் இப்போட்டியில் முதல் நாள் முடிவில் 99* ரன்கள் எடுத்த ஜோ ரூட் ஒரு நாள் இரவு காத்திருந்து சதத்தை அடித்ததாக அனில் கும்ப்ளே கூறியுள்ளார். அப்படிப்பட்ட நிலையில் நீங்கள் அரை மணி நேரம் காத்திருந்து உணவு இடைவெளிக்கு பின் சதத்தை அடிக்காமல் ரிஷப் பண்ட்டை ரன் அவுட்டாக்கலாமா? என்று ராகுலை அவர் சாடியுள்ளார்.
கும்ப்ளே சாடல்:
இது பற்றி கும்ப்ளே பேசியது பின்வருமாறு. “ஆரம்பத்தில் அழைத்த ரிஷப் பண்ட் பின்னர் ரன் இல்லையென்று நினைத்து தயங்கினார். ராகுல் ஓட ஆரம்பித்தார். எனவே பண்ட் ஆரம்பத்தில் கொஞ்சம் தயங்கியது தாமதத்தை உண்டாக்கியது. அது உறுதியாக தேவையற்றது. ஏனெனில் அடுத்த 3 பந்துகளை நீங்கள் தடுத்து உணவு இடைவேளைக்கு பின் வந்து விரும்பும் வகையில் பங்காற்றலாம். உண்மையில் அது தேவையற்றது”
இதையும் படிங்க: வெறித்தனமான இந்தியாவில் 15 வருடம்.. அதன் மேலே நின்ற கோலி கிரேட் ஆல் ஃபார்மட் பேட்ஸ்மேன்.. வில்லியம்சன் பேட்டி
“99இல் இருந்த ரூட் சதத்தை அடிக்க ஒரு நாள் முழுவதும் காத்திருந்தார். அடுத்த நாள் வந்து சதத்தை அடித்த அவர் பார்ட்னர்ஷிப் அமைத்தது இங்கிலாந்துக்கு தன்னம்பிக்கையை கொடுத்தது” என்று கூறினார். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் ராகுல் 100 ரன்களில் அவுட்டானார். இறுதியில் அடுத்து வந்த ஜடேஜா சிறப்பாக விளையாடி 72, நிதிஷ் ரெட்டி சுந்தர் 23 ரன்கள் அடித்தும் 387 ரன்களை எடுத்த இந்தியாவால் ஸ்கோரை சமன் செய்ய முடிந்ததே தவிர முன்னிலை பெற முடியவில்லை.



