இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி உலகின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக போற்றப்படுகிறார். 2008 அண்டர்-19 உலகக் கோப்பையை கேப்டனாக வென்ற அவர் சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமாகி சச்சினுக்கு பின் இந்தியாவின் ரன் மெசினாக செயல்பட்டு நிறைய வெற்றிகளில் வருகிறார். குறிப்பாக இளம் வயதிலேயே அவர் 2011 உலகக்கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வெல்ல தம்முடைய பங்காற்றினார்.
2024 டி20 உலகக் கோப்பை ஃபைனல் மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபி செமி ஃபைனலில் ஆட்டநாயகன் விருதை வென்ற அவர் இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய பங்காற்றினார். இதுவரை 81 சதங்கள் அடித்துள்ள விராட் கோலி 27000 மேற்பட்ட ரன்கள் குவித்துள்ளார். இருப்பினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சமீப காலங்களாக விராட் கோலி தடுமாறி வந்தார்.
கிரேட் ஆல் ஃபார்மட் பேட்ஸ்மேன்:
ஒரு கட்டத்தில் கேன் வில்லியம்சன், ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரை விட அபாரமாக விளையாடிய அவர் உலகின் ஃபேப் 4 பேட்ஸ்மேன்களில் அதிக ரன்கள் மற்றும் சதங்கள் அடித்து முன்னிலையில் இருந்தார். ஆனால் சமீப கால தடுமாற்றத்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 46 என்ற சுமாரான சராசரியுடன் விராட் கோலி ஓய்வு பெற்றார். அதனால் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் சுமாரான பேட்ஸ்மேன் மட்டுமே என்று சிலர் தெரிவிக்கிறார்கள்.
இந்நிலையில் இந்தியா போன்ற வெறித்தனமான ரசிகர்கள் நிறைந்த நாட்டில் எதிர்பார்ப்புக்கு நிகராக செயல்பட்டு மேலே நின்ற விராட் கோலி 15 வருடங்களாக உலகின் சிறந்த ஆல் ஃபார்மட் பேட்ஸ்மேனாக செயல்பட்டதாக கேன் வில்லியம்சன் பாராட்டியுள்ளார். கிரிக்கெட்டை தாண்டி விராட் கோலியுடன் தம்முடைய நட்பு பற்றிய ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.
வில்லியம்சன் பாராட்டு:
“கடந்த 15 வருடங்களில் விராட் கோலி நாம் பார்த்த கிரேட்டஸ்ட் ஆல் ஃபார்மட் பிளேயராக இருக்கக்கூடும். கிரிக்கெட்டின் மீதான வெறித்தனமான காதல் நிறைந்த நாட்டில் தன்னுடைய சொந்த சவால்களைக் கொண்டிருந்த அவர் மரத்தின் மேலே வந்தார். நாங்கள் பல்வேறு வழிகளில் தொடர்பில் இருக்கிறோம். ஆனால் அது போட்டியைப் பற்றியது கிடையாது. அணியில் இருக்கும் போது மட்டுமே நீங்கள் அணியாக போட்டியிட விரும்புவீர்கள்”
இதையும் படிங்க: கேஎல் ராகுல் சதத்துக்காக விக்கெட்டை தியாகம் செய்த பண்ட்.. தோனி, ரோஹித்தின் 2 அபார சாதனைகள் சமன்
“அது கொஞ்சம் வேடிக்கையானது, வட்டமானது. அது மற்றொரு அங்கமாகும். நாங்கள் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடவில்லை. பெரிய சதவீதத்தில் இணையான வாழ்க்கையை வாழ்கிறோம். வயதாகும் போது நீங்கள் அனுபவத்தையும் பெறுவீர்கள் என்பது வேறு விஷயம். எனவே எதையும் ஒரே அளவில் தொடர்புபடுத்த முடியாது” என்று கூறினார்.



