கேஎல் ராகுல் சதத்துக்காக விக்கெட்டை தியாகம் செய்த பண்ட்.. தோனி, ரோஹித்தின் 2 அபார சாதனைகள் சமன்

RIshabh Pant
- Advertisement -

இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டனில் இருக்கும் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 387 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 104 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அடுத்து விளையாடிய இந்தியாவுக்கு அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால் 8 ரன்னில் அவுட்டானார். மறுபுறம் கேஎல் ராகுல் நிதானமாக விளையாடிய நிலையில் எதிர்புறம் வந்த கருண் நாயர் 40 ரன்கள் குவித்து விக்கெட்டை இழந்தார். அதற்கடுத்ததாக வந்த கேப்டன் சுப்மன் கில் 16 ரன்கள் எடுத்து அவுட்டானதால் இந்தியா பின்னடைவை சந்தித்தது.

- Advertisement -

தியாகம் செய்த பண்ட்:

அடுத்ததாக விக்கெட் கீப்பர் ரிசப் பண்ட் லேசாக சந்தித்த காயத்தையும் பொருட்படுத்தாமல் வந்து நங்கூரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுபுறம் சிறப்பாக விளையாடிய ராகுல் அரை சதத்தை கடந்தார். நேரம் செல்ல செல்ல ஜோடி சேர்ந்த அவர்கள் 4வது விக்கெட்டுக்கு 141 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர்.

அதில் ரிஷப் பண்ட் நிதானமாக விளையாடி சமயம் கிடைக்கும் போதெல்லாம் அதிரடியான பவுண்டரிகளை பறக்க விட்டு அசத்தினார். மறுபுறம் சதத்தை நெருங்கிய ராகுல் 3வது நாள் உணவு இடைவெளிக்கு முந்தைய கடைசி ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடிக்க முயற்சித்தார். அது பவுண்டரி போகும் என்று நினைத்த அவர் சிங்கிள் மட்டுமே எடுத்து ஏமாற்றமடைந்தார்.

- Advertisement -

தோனிக்கு நிகராக:

அதைப் பார்த்த ரிசப் பண்ட் அவருக்கு ஸ்ட்ரைக்கை கொடுத்து உணவு இடைவெளிக்குள் சதத்தை அடிக்க உதவி செய்ய முயற்சித்தார். அதற்காக 3வது பந்தை அடித்த அவர் சிங்கிள் எடுக்கலாமா? என்று ஒரு வினாடி யோசித்தார். மறுபுறம் ராகுல் எதிர்ப்புறம் ஓடி வந்ததால் “சரி சதமடிக்கும் வாய்ப்பை கொடுப்போம்” என்ற எண்ணத்துடன் ரிஷப் பண்ட்டும் ஓடினார். ஆனால் அதற்குள் பென் ஸ்டோக்ஸ் பந்தை எடுத்து அவரை 74 ரன்னில் ரன் அவுட்டாக்கினார்.

இதையும் படிங்க: பணக்கார கேப்டன்கள் 2 பேரையும் தடை செய்யனும்.. இதை செஞ்சு 90 தொடப் பாருங்க? மைக்கேல் வாகன் விளாசல்

அதனால் ரிஷப் பண்ட் ஏமாற்றத்துடன் வெளியேறிய நிலையில் 248/4 ரன்களை எடுத்துள்ள இந்தியாவுக்கு ராகுல் 98* ரன்னில் உள்ளார். அந்த வகையில் ராகுலுக்காக தம்முடைய விக்கெட்டை தியாகம் செய்த ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2வது அதிக சிக்சர்கள் அடித்த இந்திய வீரர் என்ற ரோஹித் சர்மா சாதனையை (இருவரும் தலா 88) சமன் செய்துள்ளார். முதலிடத்தில் சேவாக் (91) உள்ளார். இது போக சேனா நாடுகளில் அதிக முறை 50+ ரன்களை அடித்த ஆசிய விக்கெட் கீப்பர் என்ற தோனியின் சாதனையையும் (இருவரும் தலா 13 முறை) பண்ட் சமன் செய்துள்ளார்.

Advertisement