
இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் மூன்று போட்டிகளில் தோல்வியை சந்தித்த நியூசிலாந்து அணியானது நேற்று விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்ற நான்காவது டி20 போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது முதல் ஆறுதல் வெற்றியை பதிவு செய்திருந்தது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் :
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி ஆரம்பத்திலிருந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் குவித்தது. பின்னர் 216 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய இந்திய அணி 165 ரன்கள் மட்டுமே குவித்ததால் நியூசிலாந்து அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது நியூசிலாந்து அணி சார்பாக துவக்க வீரராக களமிறங்கிய டிம் சைபர்ட் 36 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர் என 62 ரன்கள் குவித்து வெற்றிக்கு உதவி இருந்தார். இதன் காரணமாக அவருக்கு இந்த போட்டிக்கான ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தன்னுடைய ஆட்டம் குறித்து டிம் சைபர்ட் கூறியதாவது :
இந்த போட்டியில் முதல் ஓவரிலேயே டாப் எட்ஜ் மூலம் பவுண்டரி கிடைத்தது. இப்படி போட்டியின் ஆரம்பத்தில் லக் கிடைப்பது என்பது இந்த ஆட்டத்தில் சகஜமான ஒன்றுதான். பின்னர் பவர்பிளே ஓவர்களிலேயே பவுலர்களின் மீது அழுத்தம் போட வேண்டும் என்று நினைத்து விளையாடினேன். அந்த வகையிலே என்னுடைய பிளானின் படி முதல் 6 ஓவர்களில் அதிரடியாக ஆட்டத்தை துவங்கினேன்.
இதையும் படிங்க : இந்திய அணியை இங்கு வீழ்த்த வேண்டும் என்றால் இப்படித்தான் ஆடனும் – மிட்சல் சான்ட்னர் பேட்டி
பின்னால் வந்த வீரர்களும் சிறப்பாக விளையாடியதால் எங்களால் பெரிய இலக்கை நிர்ணயிக்க முடிந்தது. டி20 போட்டிகளை பொருத்தவரை போட்டியின் ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடி பவுலர்களை அழுத்தத்தில் வைக்க வேண்டும். அப்போதுதான் நம்மால் பெரிய அளவு ரன்களை குவிக்க முடியும். அதுதான் என்னுடைய திட்டம் என்றும் டிம் சைபர்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.