இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணியானது ஏற்கனவே நடைபெற்ற ஒருநாள் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றிய வேளையில் தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த டி20 தொடரின் முதல் மூன்று ஆட்டங்களில் தோல்வியை சந்தித்த நியூசிலாந்து அணியானது ஏற்கனவே டி20 தொடரினை இந்திய அணியிடம் இழந்தது.
இந்திய அணியை வீழ்த்தியது குறித்து : மிட்சல் சான்ட்னர் பேட்டி
ஆனால் நேற்று விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்ற நான்காவது போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் குவித்து அசத்தியது.
பின்னர் 216 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி நியூசிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 165 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக நியூசிலாந்து அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்சல் சான்ட்னர் கூறியதாவது : இந்த வெற்றி உண்மையிலேயே எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. பவர்பிளே ஓவரில் நாங்கள் நினைத்த விதத்தில் அதிரடியாக துவங்கியதாலே எங்களால் நல்ல இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயிக்க முடிந்தது. 200 ரன்கள் என்பது எப்போதுமே இந்திய அணிக்கு எதிராக போதுமானதாக இருக்காது. எனவே கொஞ்சம் கூடுதலாக ரன்களை குவிக்க நினைத்தோம்.
இதையும் படிங்க : 4 ஆவது போட்டியில் நாங்க தோத்திருந்தாலும் அடுத்த மேட்ச்ல நிச்சயம் இதை செய்வோம் – சூரியகுமார் யாதவ் பேட்டி
அந்த வகையிலேயே எங்களது பேட்ஸ்மேன்கள் சுதந்திரமாகவும், அதிரடியாகவும் விளையாடினர். பின்னர் பந்துவீச்சில் எங்களது வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியை வீழ்த்தியுள்ளனர். இந்தியாவில் இந்திய அணியை வீழ்த்துவது என்பது மிகவும் கடினம். இப்படி அதிரடியாக விளையாடி இந்திய அணியை வீழ்த்தினால் தான் முடியும் என மிட்சல் சான்ட்னர் கூறியது குறிப்பிடத்தக்கது.



