4 ஆவது போட்டியில் நாங்க தோத்திருந்தாலும் அடுத்த மேட்ச்ல நிச்சயம் இதை செய்வோம் – சூரியகுமார் யாதவ் பேட்டி

SKY
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியானது நேற்று விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய நியூசிலாந்து அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்களை குவித்தது.

இந்த தோல்வியிலிருந்து நிறைய கற்றுக்கொண்டோம் : சூரியகுமார் யாதவ்

நியூசிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக டின் சைபர்ட் 62 ரன்களையும், டேவான் கான்வே 44 ரன்களையும் குவித்தனர். பின்னர் 216 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது நியூசிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 165 ரன்கள் மட்டுமே குவித்தது.

- Advertisement -

இதன் காரணமாக நியூசிலாந்து அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டிக்கு பின்னர் இந்த தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது : நாங்கள் இன்றைய போட்டியில் ஆறு பேட்ஸ்மேன்களுடனே விளையாட சென்றோம். ஏனெனில் 5 முழுநேர பவுலர்களுடன் விளையாட வேண்டும் என்ற எண்ணம் எங்களிடம் இருந்தது.

அதோடு அப்படி ஐந்து முழுநேர பவுலர்களை விளையாட வைத்து சோதனை நிகழ்த்தவும் யோசித்து இருந்தோம். இந்த போட்டியில் 200 ரன்கள் வரை சேசிங் செய்யும்போது இரண்டு, மூன்று விக்கெட்டுகள் விழுந்தாலும் நாங்கள் எப்படி விளையாடுகிறோம் என்பதையும் பார்க்க விரும்பியிருந்தோம். ஆனால் இந்த போட்டியில் எங்களால் இலக்கை எட்ட முடியாமல் போனது வருத்தம் தான்.

- Advertisement -

இதையும் படிங்க : எவ்ளோ ஸ்ட்ராங்கா இருந்தாலும் கொஞ்சம் கவனமா இருங்க.. டி20 உ.கோ தொடருக்கு முன்னர் – ராகுல் டிராவிட் எச்சரிக்கை

ஆனாலும் அடுத்து இதேபோன்று 180 முதல் 200 ரன்கள் வரை வெற்றி இலக்கு இருக்கும்போது இரண்டு, மூன்று விக்கெட்டுகள் விழுந்தாலும் அதனை சேசிங் செய்து எட்டுவோம் என்று நம்புகிறேன். அடுத்த வாய்ப்பு கிடைக்கும்போது நிச்சயம் நாங்கள் இலக்கினை விரட்டுவோம் என சூரியகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement