2023 உ.கோ : கங்குலி சொன்ன மாதிரி திலக் வர்மாவுக்கு அவசரப்பட்டு சான்ஸ் கொடுத்து வருத்தப்படாதீங்க – முன்னாள் செலக்டர் எச்சரிக்கை

Tilak-Varma
- Advertisement -

இந்தியாவில் முதல் முறையாக முழுவதுமாக ஐசிசி நடத்தும் 2023 உலகக்கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. அதில் ரோகத் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2011 போல சொந்த மண் சாதகத்தை பயன்படுத்தி கோப்பையை வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தோல்விகளை நிறுத்தும் முனைப்புடன் களமிறங்க உள்ளது. அதற்கு தயாராகும் வகையில் நடைபெறும் 2023 ஆசிய கோப்பைக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளது விக்கெட் கீப்பர் மற்றும் 4வது பேட்ஸ்மேன் இடத்தை இருக்கும் வகையில் அமைந்துள்ளது.

Tilak-Varma

- Advertisement -

அதே சமயம் அந்த அணியில் ஒருநாள் போட்டிகளில் இதுவரை அறிமுகமாகாத திலக் வர்மா தேர்வாகியுள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்துவதாக அமைந்தது. குறிப்பாக 2011 உலகக் கோப்பையில் யுவராஜ் சிங், கௌதம் கம்பீர், சுரேஷ் ரெய்னா போன்ற இடது கை பேட்ஸ்மேன்கள் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்கள். அது போன்ற சூழ்நிலையில் தற்போதைய அணியில் ரோகத் சர்மா முதல் ஹர்திக் பாண்டியா வரை டாப் 6 வீரர்களும் வலது கை பேட்ஸ்மேன்களாக இருப்பதால் பின்னடைவை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அவசரப்பட வேண்டாம்:
அந்த நிலையில் ஹைதராபாத்தை சேர்ந்த இளம் திலக் வர்மா கடந்த சில வருடங்களாக ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் மிடில் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேனாக 300க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்து அசத்தலாக செயல்பட்டார். அதன் காரணமாக சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் அறிமுகமாகி சவாலான மைதானங்களில் இதர வீரர்கள் தடுமாறிய போது அதிக ரன்கள் அடித்து வெற்றிக்கு போராடிய அவர் 20 வயதிலேயே முதிர்ச்சியான செயல்பாடுகளை வெளிப்படுத்தி ரோகித் சர்மாவின் சில சாதனைகளையும் உடைத்தார்.

Tilak Varma

அப்படி இளம் வயதிலேயே முதிர்ச்சியாக செயல்பட்ட அவரை வைத்து இடது கை பேட்ஸ்மேன் பிரச்சனையை தீர்க்கலாம் என்று நிறைய முன்னாள் வீரர்கள் கேட்டுக் கொண்டனர். அதன் காரணமாக இந்த ஆசிய கோப்பையில் தேர்வாகியுள்ள அவர் அதில் வாய்ப்பு பெற்று அசுத்தம் பட்சத்தில் உலக கோப்பையில் இடம் பெறுவதற்கும் வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளது. இருப்பினும் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது என்ற நிலைமையில் சுமாரான பவுலிங்கை கொண்ட வெஸ்ட் இண்டீஸ் எதிராக ஒரு தொடரில் சிறப்பாக செயல்பட்ட காரணத்தால் அவரை அவசரப்பட்டு உலகக் கோப்பை போன்ற பெரிய தொடரில் தேர்வு செய்து விடாதீர்கள் என்ற விமர்சனங்களும் காணப்படுகின்றன.

- Advertisement -

இந்த விவாதங்களுக்கு மத்தியில் இதுவரை ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகாத திலக் வர்மாவை உலகக்கோப்பை போன்ற பெரிய தொடரில் அதற்குள் அவசரப்பட்டு வாய்ப்பு கொடுப்பது சரியான முடிவாக இருக்காது என 2011 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியை தேர்வு செய்த முன்னாள் தேர்வுக்குழு தலைவர் மற்றும் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார். குறிப்பாக சௌரவ் கங்குலி சொன்னது போல இளம் வீரரை நேரடியாக உலகக் கோப்பையில் விளையாட வைக்காமல் அதற்கு முன் சில இருதரப்பு தொடர்களில் விளையாட வைத்து சோதனை செய்து பின்பு வாய்ப்பு தருவதை சரியாக இருக்கும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு.

Kris-Srikkanth

“திலக் வர்மா நான் சொல்லும் விஷயத்தை தான் கங்குலியும் தெரிவித்தார். அதாவது ஒரு பெரிய தொடரில் அவருக்கு அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பை கொடுக்க வேண்டாம். மாறாக சில இரு தரப்பு ஒருநாள் தொடரில் விளையாட வையுங்கள். கங்குலியும் இதே கருத்தை தான் கொண்டிருந்தார். திலக் வர்மா நல்ல திறமையை கொண்டுள்ள நல்ல வீரர்”

இதையும் படிங்க:PAK vs AFG : போராடிய பாகிஸ்தான், கடைசி நேரத்தில் மன்கட் செய்து ட்விஸ்ட் வைத்த ஆப்கானிஸ்தான் – கடைசியில் கைமாறிய வெற்றி

“ஆனால் எடுத்த எடுப்பிலேயே அவரை உலகக்கோப்பை போன்ற பெரிய தொடரில் களமிறக்காதீர்கள். எனவே அதை செய்யாமல் சில இருதரப்பு ஒருநாள் தொடர்களில் விளையாட வைத்து அடுத்த டி20 மற்றும் உலகக்கோப்பைக்கு தகுதியான வீரராக வளர விடுங்கள். இதுவே ஒரு இளம் வீரரை வளர்ப்பது என்பதற்கான அர்த்தமாகும்” என்று கூறினார்.

Advertisement