PAK vs AFG : போராடிய பாகிஸ்தான், கடைசி நேரத்தில் மன்கட் செய்து ட்விஸ்ட் வைத்த ஆப்கானிஸ்தான் – கடைசியில் கைமாறிய வெற்றி

PAk vs AFg 3
- Advertisement -

பொதுவான இடமான இலங்கையில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மோதி வருகின்றன. அதில் முதல் போட்டியில் வென்ற பாகிஸ்தான் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று தங்களை வலுவான அணி என்பதை நிரூபித்தது. மறுபுறம் தோல்வியை சந்தித்த ஆப்கானிஸ்தான் ஆகஸ்ட் 24ஆம் தேதி ஹம்பன்தோட்டாவில் நடைபெற்ற வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 300/5 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக 227 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய ரஹ்மத்துல்லா குர்பாஸ் 151 (151) ரன்களும் இப்ராகிம் ஜாட்ரான் 80 (101) ரன்களும் எடுத்தனர்.

அதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக தங்களுடைய அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து ஆப்கானிஸ்தான் சாதனையும் படைத்தது. மறுபுறம் பந்து வீச்சில் சுமாராகவே செயல்பட்ட பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஷாஹீன் அப்ரிடி 2 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 301 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு 52 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த தொடக்க வீரர் பகார் ஜமான் 30 (34) ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

த்ரில் வெற்றி:
அதை தொடர்ந்து வந்த கேப்டன் பாபர் அசாம் மறுபுறம் நங்கூரமாக விளையாடிய மற்றொரு தொடக்க வீரர் இமாமுடன் சேர்ந்து 2வது விக்கெட்டுக்கு 118 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பாகிஸ்தானை வலுப்படுத்தி 53 (66) ரன்களில் அவுட்டானார். ஆனால் அவருக்குப் பின் வந்த முகமது ரிஸ்வான் 2 (7) ரன்னில் ரன் அவுட்டாகி செல்ல அடுத்ததாக வந்த சல்மான் ஆகா 17, உஸ்மான் மிர் 0 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர்.

அடுத்த சில ஓவர்களில் மறுபுறம் போராடிய இமாம்-உல்-ஹக் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 91 (105) ரன்களில் ஆட்டமிழந்தது ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார். போதாக்குறைக்கு ஃபினிஷிங் செய்வார் என்று பார்க்கப்பட்ட இப்திகார் அகமதும் 17 (24) ரன்களில் அவுட்டாக ஷாஹீன் அப்ரிடியும் 4 ரன்களில் நடையை கட்டினார். அப்படி ஆப்கானிஸ்தானின் தரமான பந்து வீச்சில் பாகிஸ்தான் சீரான இடைவெளிகளில் 8 விக்கெட்டுகளை இழந்ததால் கடைசி 2 ஓவரில் வெற்றி பெறுவதற்கு 27 ரன்கள் தேவைப்பட்டது.

- Advertisement -

இருப்பினும் அந்த சமயத்தில் மறுபுறம் சற்று அதிரடியாக விளையாடி போராடிக் கொண்டிருந்த சடாப் கான் 49வது ஓவரில் பவுண்டரி மற்றும் சிக்ஸர்களை அடித்து வெற்றிக்கு போராடினார். அதனால் வெற்றியை நெருங்கிய பாகிஸ்தானுக்கு கடைசி ஓவரில் வெறும் 11 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் எப்படியாவது ஆப்கானிஸ்தானை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் முதல் பந்தை வீசுவதற்கு முன்பாகவே 48 (35) ரன்களில் எதிர்ப்புறமிருந்த சடாப் கான் வேகமாக வெள்ளைக்கோட்டை விட்டு வெளியேறினார்.

அதை அந்த கடைசி ஓவரை வீசிய ஆப்கானிஸ்தான் பவுலர் பரூக்கி உன்னிப்பாக கவனித்து பந்தை வீசுவதை நிறுத்தி மன்கட் முறையில் ரன் செய்து போட்டியில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் காரணமாக மிகப்பெரிய பரபரப்பும் ஏற்பட்ட நிலையில் புதிதாக களமிறங்கியிருந்த நாசீம் ஷா அடுத்த பந்தில் பவுண்டரி அடித்து 3வது பந்தில் சிங்கிள் எடுத்தார். அதைத் தொடர்ந்து 4வது பந்தில் புதிதாக வந்திருந்த ஹரிஷ் ரவூப் 3 ரன்களை எடுத்ததால் கடைசி 2 பந்துகளில் பாகிஸ்தானின் வெற்றிக்கு 1 ரன் மட்டுமே தேவைப்பட்டது.

- Advertisement -

அப்போது 5வது பந்தில் எட்ஜ் வாயிலாக பவுண்டரி அடித்த நாசீம் ஷா 10* (5) ரன்களுடன் பினிஷிங் கொடுத்து 49.5 ஓவரில் பாகிஸ்தானை 302/9 ரன்கள் எடுக்க வைத்து வெறும் 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார். குறிப்பாக 2022 ஆசியக் கோப்பையில் இதே ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கடைசிப்பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றி பெற வைத்த மேஜிக்கை அவர் மீண்டும் நிகழ்த்தியது பாகிஸ்தான் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது.

இதையும் படிங்க:PAK vs AFG : போராடிய பாகிஸ்தான், கடைசி நேரத்தில் மன்கட் செய்து ட்விஸ்ட் வைத்த ஆப்கானிஸ்தான் – கடைசியில் கைமாறிய வெற்றி

மறுபுறம் முதல் போட்டியை போலவே கடுமையாக போராடிய ஆப்கானிஸ்தான் இம்முறை டெத் ஓவர்களில் ரன்களை வாரி வழங்கியதால் அதிகபட்சமாக பரூக்கி 3 விக்கெட்டுகள் எடுத்தும் வெற்றி காண முடியவில்லை. அதனால் 2 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரை ஆரம்பத்திலேயே பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement