கூடிய சீக்கிரம் அவர் இந்தியாவின் ஆல் ஃபார்மட் பிளேயரா வருவாரு பாருங்க – இளம் வீரரை பாராட்டிய சபா கரீம்

Saba Karim
- Advertisement -

இந்தியாவில் வரும் அக்டோபர் 5 முதல் நடைபெறும் 2023 ஐசிசி உலகக் கோப்பைக்காக அனைத்து கிரிக்கெட் அணிகளும் தயாராகி வருகின்றன. அதில் சொந்த மண்ணில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா 2011 போல கோப்பையை வென்று சரித்திரம் படைக்கும் முனைப்புடன் தயாராகி வருகிறது. அந்த பயணத்தின் இறுதிக்கட்டமாக ஆகஸ்ட் 30ஆம் தேதி துவங்கும் 2023 ஆசிய கோப்பை தொடரில் விளையாடுவதற்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் காயத்திலிருந்து குணமடைந்து கம்பேக் கொடுத்துள்ளார்கள்.

Tilak-Varma

- Advertisement -

அதை விட அந்த அணியில் இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகாத இளம் வீரர் திலக் வர்மா நேரடியாக ஆசிய கோப்பையில் விளையாடுவதற்கு தேர்வாகியுள்ளது ஆச்சரியமாக அமைந்தது என்றே சொல்லலாம். ஹைதராபாத்தை சேர்ந்த அவர் 2020 அண்டர்-19 உலகக் கோப்பை இந்திய அணியில் அங்கமாக இருந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்தார். அதன் பயனாக ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடும் வாய்ப்பு பெற்ற அவர் கடந்த 2 சீசன்களில் மிடில் ஆர்டரில் 300க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து அனைவரது கவனத்தை ஈர்த்தார்.

ஆல் ஃபார்மட் பிளேயர்:
அதன் காரணமாக சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் அறிமுகமான அவர் சவாலான மைதானங்களில் இதர வீரர்கள் தடுமாறிய போது சிறப்பாக செயல்பட்டு அதிக ரன்கள் அடித்து இந்தியாவின் வெற்றிக்கு போராடினார். குறிப்பாக 20 வயதிலேயே முதிர்ச்சியான செயல்பாடுகளை வெளிப்படுத்தி ரோகித் சர்மாவின் சில சாதனைகளையும் உடைத்த அவர் ஆச்சரியப்படும் வகையில் இந்த ஆசிய கோப்பையில் மிடில் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக தேர்வாகியுள்ளார்.

Tilak varma 19

ஒருவேளை இத்தொடரில் வாய்ப்பு பெற்று அச்சத்தினால் உலகக்கோப்பை அணியிலும் அவர் தேர்வு செய்யப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்று சொல்லலாம். ஆனால் வெறும் ஒரு டி20 தொடரில் சிறப்பாக விளையாடி வெஸ்ட் இண்டீஸ் போன்ற சுமாரான பவுலிங்கை எதிர்கொண்டு அசத்தினார் என்பதற்காக ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் இல்லாமலேயே அழுத்தமான உலகக்கோப்பையில் அவரை தேர்வு செய்வது பின்னடைவை ஏற்படுத்தலாம் என சில விமர்சனங்களும் காணப்படுகின்றன.

- Advertisement -

இருப்பினும் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட்டில் 25 போட்டிகளில் 1236 ரன்களை 56.18 என்ற நல்ல சராசரியில் எடுத்துள்ள அனுபவத்தை கொண்ட அவர் மைக்கெல் பெவன் போல அசத்தும் தன்னைக் கொண்டுள்ளதால் தாராளமாக வாய்ப்பு கொடுக்கலாம் என முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் ஆதரவு தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த ஆசிய மற்றும் உலகக்கோப்பையில் வாய்ப்பு பெற்றாலும் இல்லையென்றாலும் வரும் காலத்தில் 3 வகையான கிரிக்கெட்டிலும் அசத்தும் அளவுக்கு திலக் வர்மாவிடம் திறமை இருப்பதாக முன்னாள் வீரர் மற்றும் தேர்வுக்குழு உறுப்பினர் சபா கரீம் பாராட்டியுள்ளார்.

Karim

இது பற்றி ஜியோ சினிமா சேனலில் அவர் பேசியது பின்வருமாறு. “களத்தில் வெளிப்படுத்திய செயல்பாடுகளை வைத்து ஒரு வீரருக்கு தேர்வுக்குழு மற்றும் அணி நிர்வாகம் ஆதரவு கொடுப்பார்கள். எனவே டி20 கிரிக்கெட்டில் அசத்திய ஒருவரை ஒருநாள் போட்டிகளுக்கு தேர்வு செய்வதில் எந்த தவறுமில்லை. அத்துடன் திலக் வர்மா லிஸ்ட் ஏ போட்டிகளில் போதிய அனுபவத்தை கொண்டுள்ளார் என்பதையும் மறந்து விடக்கூடாது. குறிப்பாக 12 – 15 உள்ளூர் போட்டிகளில் விளையாடி 50க்கும் மேற்பட்ட சராசரியை கொண்டுள்ள அவருக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும்”

- Advertisement -

“எனவே அனுபவத்தைக் கொண்டுள்ள அவருக்கு டி20 கிரிக்கெட்டை போல ஒருநாள் போட்டிகளில் அசத்துவதற்கு நீண்ட காலம் தேவைப்படாது. ஆசிய கோப்பையில் தேர்வாகியுள்ளது அவருக்கு நல்ல வாய்ப்பாகும். அங்கே சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் நிலவும் சூழ்நிலைகளுக்கு எப்படி தயாராகலாம் என்பதை அவரால் கற்றுக் கொள்ள முடியும்”

இதையும் படிங்க:PAK vs AFG : பாபர் அசாம், சங்ககாராவை முந்திய ஆப்கானிஸ்தான் வீரர் – பாகிஸ்தானை விளாசி 2 வரலாற்று சாதனை

“அதனால் உலகக்கோப்பை அணியில் இருந்தாலும் இல்லையென்றாலும் ஆசிய கோப்பையில் வாய்ப்பு பெற்றாலும் இல்லையென்றாலும் டி20 கிரிக்கெட்டில் வெளிப்படுத்திய செயல்பாடுகளால் அணி நிர்வாகம் மற்றும் தேர்வுக்குழு அவரை நம்புகிறது என்பது தெரிகிறது. இது வருங்காலத்தில் அவர் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் விளையாடப் போகும் வீரராக வருவார் என்பதை காட்டுகிறது” எனக் கூறினார்.

Advertisement