PAK vs AFG : பாபர் அசாம், சங்ககாராவை முந்திய ஆப்கானிஸ்தான் வீரர் – பாகிஸ்தானை விளாசி 2 வரலாற்று சாதனை

Rahamadullah Gurbhas
- Advertisement -

பாகிஸ்தானுக்கு மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகள் பொதுவான இடமான இலங்கையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. விரைவில் துவங்கும் 2023 ஆசிய மற்றும் உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டியில் எதிர்பார்க்கப்பட்டது போலவே பாகிஸ்தான் வெற்றி பெற்ற ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. குறிப்பாக தங்களை 201 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய ஆப்கானிஸ்தானை வெறும் 59 ரன்களுக்கு சுருட்டி மிகப்பெரிய வெற்றி பெற்ற பாகிஸ்தான் தங்களை வலுவான அணி என்பதை காண்பித்தது.

PAk vs AFG Haris Rauf Shaheen Afridi

- Advertisement -

அந்த நிலைமையில் ஆகஸ்ட் 24ஆம் தேதி இலங்கையில் இருக்கும் ஹம்பன்தோட்டாவில் நடைபெற்ற இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு தொடக்க வீரர்கள் ரஹ்மத்துல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஜாட்ரான் ஆகியோர் ஆரம்ப முதலே நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்தி சீரான ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

சாதனை வீரர்:
குறிப்பாக கடந்த போட்டியில் தங்களுக்கு தலைகுனியும் தோல்வியை பரிசளித்த பாகிஸ்தானுக்கு இம்முறை பதிலடி கொடுக்க வேண்டும் என்ற வெறியுடன் பேட்டிங் செய்த அந்த ஜோடி ஷாஹின் அப்ரிடி போன்ற பவுலர்களுக்கு விரைவில் அடிபணியாமல் நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். அந்த வகையில் பவர் பிளே முடிந்தும் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அவுட்டாகாமல் அடம் பிடித்த இந்த ஜோடி நேரம் செல்ல செல்ல நங்கூரமாக நின்று ஹரிஷ் ரவூப், நசீம் ஷா போன்ற பாகிஸ்தானின் தரமான பவுலர்களை நேர்த்தியாக எதிர்கொண்டு ஆப்கானிஸ்தானை வலுப்படுத்தினர்.

Gurbas 2

அதில் சற்று அதிரடியாக விளையாடிய ரகமதுள்ளா குர்பாஸ் முதல் ஆளாக சதமடித்து அசத்திய நிலையில் மறுபுறம் நிதானமாக விளையாடிய இப்ராஹிம் ஜாட்ரான் 39.5 ஓவர்கள் வரை நின்று 227 ரன்கள் மெகா ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து 89 (101) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த சில ஓவர்களிலேயே மறுபுறம் பாகிஸ்தான் பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக செயல்பட்ட ரஹ்மத்துல்லா குர்பாஸ் 14 பவுண்டரி 3 சிக்ஸருடன் 151 (151) ரன்கள் குவித்து அவுட்டானார்.

- Advertisement -

இறுதியில் முகமது நபி 29 (29) ரன்களும் கேப்டன் ஷாகிதி 15* (11) ரன்களும் எடுத்த உதவியுடன் 50 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் 300/5 ரன்கள் எடுத்த நிலையில் பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஷாஹின் அப்ரிடி 2 விக்கெட்களை சாய்த்தார்.  அப்படி உலகின் தரமான பவுலர்களைக் கொண்ட பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட ஆப்கானிஸ்தான் வரலாற்றிலேயே முதல் முறையாக 300 ரன்கள் குவித்து தங்களுடைய அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்து சாதனை படைத்தது.

AFg Gurbhas and Zadran

1. அந்த சாதனை படைப்பதற்கு 151 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய ரஹமதுல்லா குர்பாஸ் ஒருநாள் கிரிக்கெட்டில் வலுவான பாகிஸ்தானுக்கு எதிராக சதமடித்த முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற சரித்திரமும் பாகிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன் என்ற சாதனையும் படைத்தார். இதற்கு முன் கடந்த 2018ஆம் ஆண்டு அபுதாபியில் நடைபெற்ற போட்டியில் ஹஸ்மதுல்லா ஷாஹிதி பாகிஸ்தானுக்கு எதிராக 97 (118) ரன்கள் எடுத்ததே முந்தைய அதிகபட்ச ஸ்கோராகும்.

- Advertisement -

2. மேலும் இப்போட்டி நடைபெறும் இலங்கையின் ஹம்பன்தோட்டா மைதானத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் என்ற இலங்கை ஜாம்பவான் குமார் சங்ககாராவின் சாதனையையும் அவர் முறியடித்துள்ளார். அந்த பட்டியல்:
1. ரஹ்மத்துல்லா குர்பாஸ் : 151, பாகிஸ்தானுக்கு எதிராக, 2023*
2. குமார் சங்ககாரா : 133, இந்தியாவுக்கு எதிராக, 2014
3. குயிட்டன் டீ காக் : 128, இலங்கைக்கு எதிராக, 2014

இதையும் படிங்க:PAK vs AFG : உலகின் சிறந்த பவுலர்களை கொண்ட பாகிஸ்தான் பரிதாபம் சாதனை – பேட்டிங்கில் இரட்டை வரலாறு படைத்த ஆப்கானிஸ்தான்

3. அத்துடன் 23 இன்னிங்ஸில் தன்னுடைய 5வது சதத்தை பதிவு செய்துள்ள அவர் ஒருநாள் போட்டிகளில் வேகமாக 5 சதங்களை அடித்த 2வது வீரர் என்ற பாபர் அசாம் சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் 25 இன்னிங்ஸில் 5 சதங்கள் அடித்திருந்த பாபர் அசாம் தற்போது அந்த பட்டியலில் 3வது இடத்திற்கு சென்றுள்ள நிலையில் குயின்டண் டீ காக் மற்றும் இமாம்-உல்-ஹக் ஆகியோர் தலா 19 இன்னிங்ஸில் 5 சதங்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார்கள்.

Advertisement