PAK vs AFG : உலகின் சிறந்த பவுலர்களை கொண்ட பாகிஸ்தான் பரிதாபம் சாதனை – பேட்டிங்கில் இரட்டை வரலாறு படைத்த ஆப்கானிஸ்தான்

AFg Gurbhas and Zadran
- Advertisement -

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி துவங்கும் 2023 ஆசிய கோப்பை மற்றும் அக்டோபர் 5ஆம் தேதி துவங்கும் 2023 ஐசிசி உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டியில் வென்ற பாகிஸ்தான் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. குறிப்பாக அந்த போட்டியில் தங்களை 201 ரன்களுக்கு கட்டுப்படுத்திய ஆப்கானிஸ்தானை வெறும் 59 ரன்களுக்கு சுருட்டி மெகா வெற்றி பெற்ற பாகிஸ்தான் வலுவான அணி என்பதை நிரூபித்தது.

PAk vs AFG Haris Rauf Shaheen Afridi

- Advertisement -

மறுபுறம் போராடிக் கொண்டு வந்த வெற்றியை சுமாரான பேட்டிங்கால் கோட்டை விட்ட ஆப்கானிஸ்தான் ஆகஸ்ட் 24ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு ஹம்பன்தோட்டாவில் துவங்கிய வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய சூழ்நிலையில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு ரஹ்மத்துல்லா குர்பாஸ் மற்றும் இப்ராகிம் ஜாட்ரான் ஆகிய தொடக்க வீரர்கள் ஆரம்பம் முதலே நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்தி சீரான ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

அசத்திய ஆப்கானிஸ்தான்:
குறிப்பாக கடந்த போட்டியில் தங்களை 59 ரன்களுக்கு சுருட்டி அவமான தோல்வியை பரிசளித்த பாகிஸ்தானுக்கு இம்முறை பதிலடி கொடுக்க வேண்டும் என்ற உறுதியுடன் பேட்டிங் செய்த அந்த ஜோடி ஷாஹீன் அப்ரிடி போன்றவர்களுக்கு வளைந்து கொடுக்காமல் பவர் பிளே கடந்தும் அவுட்டாகாமல் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்தது. அதே வேகத்தில் நேரம் செல்ல செல்ல நங்கூரமாக மாறி ஹரிஷ் ரவூப், நசீம் ஷா போன்ற தரமான பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்ட அந்த ஜோடியில் இருவருமே அரை சதமடித்து அசத்தினார்கள்.

AFg Gurbhas and Zadran

அதில் சற்று அதிரடியாக விளையாடிய குர்பாஸ் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் ஆளாக சதமடித்து தம்முடைய அணியை வலுப்படுத்தினார். அப்படி போதும் போதும் என்று பாகிஸ்தான் பவுலர்கள் சொல்லும் அளவுக்கு சீரான ரன் குலுப்பில் ஈடுபட்ட இந்த ஜோடி 39.5 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 227 ரன்கள் மெகா ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆப்கானிஸ்தானுக்கு அற்புதமான துவக்கம் கொடுத்த போது இப்ராஹிம் ஜாட்ரான் 6 பவுண்டரி 2 சிக்சருடன் 80 (101) ரன்கள் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அதே போல் மறுபுறம் தொடர்ந்து அசத்திய ரஹமதுல்லா குர்பாஸ் 14 பவுண்டரி 3 சிக்ஸருடன் 151 (151) ரன்கள் விளாசி பாகிஸ்தானை பந்தாடி ஆட்டமிழந்தார். இறுதியில் முகமது நபி 29 (29) கேப்டன் ஷா ஹிதி 15* (11) ரன்கள் எடுத்த உதவியுடன் 50 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் 300/5 ரன்கள் எடுக்க பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஷாஹுன் அப்ரிடி 2 விக்கெட்களை எடுத்தார்.

முன்னதாக ஷாஹின் அப்ரிடி, ஹரிஷ் ரவூப், நசீம் ஷா போன்ற வேகப்பந்து வீச்சாளர்களை கொண்ட தங்களுடைய அணி தான் இந்த உலகிலேயே மிகச்சிறந்த பந்துவீச்சு கூட்டணியை கொண்டிருப்பதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் மார் தட்டுவது வழக்கமாகும். ஆனால் இப்போட்டியில் அப்படிப்பட்ட பவுலர்கள் ஒரு விக்கெட் கூட எடுக்க முடியாத அளவுக்கு ஆரம்பத்திலேயே நங்கூரமாக விளையாடிய ஆப்கானிஸ்தான் துவக்க வீரர்கள் சுமார் 40 ஓவர்கள் வரை அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி திணறடித்தார்கள் என்றே சொல்லலாம்.

- Advertisement -

சொல்லப்போனால் இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் கத்துக்குட்டியாக கருதப்படும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாக பாகிஸ்தான் முதல் 10 ஓவர்களில் ஒரு விக்கெட் கூட எடுக்க முடியாமல் பரிதாபமான சாதனை படைத்துள்ளது. அந்தளவுக்கு தரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக வரலாற்றில் முதல் முறையாக 300 ரன்கள் அடித்து தங்களுடைய அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து புதிய இரட்டை சாதனைகளை படைத்துள்ளது.

Gurbas 2

இதையும் படிங்க:PAK vs AFG : உலகின் சிறந்த பவுலர்களை கொண்ட பாகிஸ்தான் பரிதாபம் சாதனை – பேட்டிங்கில் இரட்டை வரலாறு படைத்த ஆப்கானிஸ்தான்

இதற்கு முன் கடந்த 2018ஆம் ஆண்டு அபுதாபியில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் 257/6 ரன்கள் எடுத்ததே முந்தைய அதிகபட்ச ஸ்கோராகும். அந்த வகையில் இந்த போட்டியில் வரலாற்றில் உச்சகட்டமாக பாகிஸ்தான் பவுலர்களை ஆப்கானிஸ்தான் திணறடித்ததை பார்க்கும் இந்திய ரசிகர்கள் என்னடா இது உலகின் சிறந்த பவுலிங் அட்டாக்கிற்கு வந்த சோதனை என்று சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர்.

Advertisement