நாங்க நல்லா தான் ஆடுனோம்.. தோல்விக்கு மொத்த காரணமும் அது தான்.. திலக் வர்மா ஏமாற்றம்

Tilak Varma Press.jpeg
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை தயாராகும் பயணத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் 2வது போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. போர்ட் எலிசபெத் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா போராடி 19.3 ஓவரில் 180/7 ரன்கள் எடுத்தது.

ஜெய்ஸ்வால், கில் ஆகிய துவக்க வீரர்கள் அடுத்தடுத்து டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 56, ரிங்கு சிங் 68*, திலக் வர்மா 29 ரன்கள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து மழையால் 15 ஓவரில் 152 ரன்கள் தேவை என்று புதிய இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு ரீசா ஹென்றிக்ஸ் 49, கேப்டன் மார்க்ரம் 30 ரன்கள் எடுத்து 13.5 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற உதவினர்.

- Advertisement -

நல்லா விளையாடினோம்:
மறுபுறம் பந்து வீச்சில் சுமாராக செயல்பட்டு தோல்வியை சந்தித்த இந்தியா இத்தொடரை சமன் செய்ய கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் பேட்டிங்கில் சுமாரான துவக்கத்தை பெற்றாலும் பின்னர் போராடி வெற்றி பெறக் கூடிய இலக்கை நிர்ணயித்ததாக இளம் வீரர் திலக் வர்மா கூறியுள்ளார்.

ஆனால் இடையே மழை வந்து மைதானத்தை ஈரமாக்கியதால் பந்தை சரியாக பிடித்து வீச முடியவில்லை என்று தெரிவிக்கும் அவர் அதுவே இந்தியா தோல்வியை சந்தித்ததற்கும் காரணம் என்று கூறியுள்ளார். இது பற்றி போட்டியின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு. “பவர்பிளே ஓவர்களில் நாங்கள் சற்று எக்ஸ்ட்ரா ரன்களை வழங்கி விட்டோம் என்று கருதுகிறேன். ஆனாலும் நாங்கள் அதன் பின் வலுவாக கம்பேக் கொடுத்தோம்”

- Advertisement -

“இருப்பினும் மழையால் வெளிப்புற களங்கள் மிகவும் ஈரமாக இருந்தது. அதனால் பந்தை நாங்கள் நினைத்த அளவுக்கு சரியாகப் பிடிக்க முடியவில்லை. இருப்பினும் நாங்கள் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டோம். தென்னாபிரிக்காவில் விளையாடுவது எப்போதுமே சவாலாக இருக்கும். இங்குள்ள சூழ்நிலைகளை சமாளிக்க நாங்கள் தயாராக இருந்தோம். அதனாலேயே கடினமான சூழ்நிலையிலும் நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்தோம்”

இதையும் படிங்க: மேக்ஸ்வெல் சாதிக்கும் போது உங்களால முடியாதா? அப்ரோச்ச மாத்துங்க.. நட்சத்திர வீரருக்கு கம்பீர் அட்வைஸ்

“இப்போட்டியில் எங்களுடைய துவக்க வீரர்கள் சிறப்பாக செயல்படவில்லை. ஆனால் அதன் பின் சூரியகுமார், நான் ரிங்கு ஆகியோர் நன்றாக விளையாடி ரன்கள் அடித்தோம். ஆனால் மழை காரணமாக வெளிப்புற களங்கள் மிகவும் ஈரமாக இருந்தது. நாங்கள் பேட்டிங் செய்த போது பிட்ச் சற்று மெதுவாக இருந்ததாக கருதினோம். அந்த சமயங்களில் சம்ஸி மற்றும் மார்க்கம் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினார்கள். இல்லையென்றால் நாங்கள் 200க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்திருப்போம்” என்று கூறினார்.

Advertisement