என்ன டீம் செலெக்சன் இது.. அந்த 2 பிளேயர்ஸ் ஏன் ஆடல.. கேப்டன் சூர்யகுமாருக்கு கம்பீர் கேள்வி

Gautam Gambhir and Suryakumar
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக தங்களின் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் 2வது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற தென்னாப்பிரிக்க ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. போர்ட் எலிசபெத் நகரில் டிசம்பர் 12ஆம் தேதி நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 19.3 ஓவரில் 180/7 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக ரிங்கு சிங் 68*, கேப்டன் சூரியகுமார் யாதவ் 56 ரன்கள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து மழையால் 15 ஓவரில் 152 ரன்கள் என்ற புதிய இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்காவுக்கு ரிசா ஹென்றிக்ஸ் 49, ஐடன் மார்க்கம் 30 ரன்கள் எடுத்து 13.5 ஓவரில் எளிதாக வெற்றி பெற வைத்தனர். அதனால் இத்தொடரை சமன் செய்ய கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.

- Advertisement -

கம்பீர் கேள்வி:
முன்னதாக 4 – 1 என்ற கணக்கில் சமீபத்திய ஆஸ்திரேலிய தொடரை வெல்வதற்கு 9 விக்கெட்டுகளை எடுத்து முக்கிய பங்காற்றி தொடர் நாயகன் விருது வென்று ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக முன்னேறிய ரவி பிஷ்னோய் இப்போட்டியில் அதிரடியாக நீக்கப்பட்டது தோல்விக்கு மறைமுக காரணமானது. அதே போல 2023 உலகக் கோப்பையில் அபாரமாக விளையாடி 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து நல்ல ஃபார்மில் இருக்கும் ஸ்ரேயாஸ் ஐயரும் இப்போட்டியில் தேர்வு செய்யப்படவில்லை.

இந்நிலையில் தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் ரவி பிஷ்னோய் மற்றும் ஆஸ்திரேலிய தொடரில் துணை கேப்டனாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இப்போட்டியில் ஏன் விளையாடவில்லை என்பதை சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி நிர்வாகம் விளக்க வேண்டும் என கௌதம் கம்பீர் விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஷ்ரேயாஸ் நீக்கப்பட்டதற்கான காரணம் எனக்கு தெரியவில்லை”

- Advertisement -

“பெங்களூருவில் நடைபெற்ற கடந்த போட்டியில் அரை சதமடித்தார். ஒருவேளை இடது கை பேட்ஸ்மேன் வேண்டும் என்பதற்காக அவர் நீக்கப்பட்டிருக்கலாம். அல்லது ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் ஏதேனும் காயத்தை சந்தித்திருக்கலாம். இதற்கான பதிலை அணி நிர்வாகம் தான் கொடுக்க வேண்டும். அதே போல உலகின் நம்பர் ஒன் டி20 பவுலராக இருப்பவரும் உன்னுடைய பிளேயிங் லெவனில் இல்லை”

இதையும் படிங்க: மேக்ஸ்வெல் சாதிக்கும் போது உங்களால முடியாதா? அப்ரோச்ச மாத்துங்க.. நட்சத்திர வீரருக்கு கம்பீர் அட்வைஸ்

“இது முதன்மையான இந்திய அணி அல்ல என்பதையும் மறந்து விடாதீர்கள். இத்தொடர் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதற்காக நடைபெறுகிறது. எனவே இதற்கான விளக்கத்தை சூரியகுமார் யாதவ் மற்றும் இந்திய அணி நிர்வாகம் தான் கொடுக்க வேண்டும்” என்று கூறினார். இருப்பினும் குல்தீப், ஜடேஜா ஆகிய மூத்த ஸ்பின்னர்கள் அணிக்குள் வந்ததால் பிஷ்னோய் நீக்கப்பட்டிருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement