மேக்ஸ்வெல் சாதிக்கும் போது உங்களால முடியாதா? அப்ரோச்ச மாத்துங்க.. நட்சத்திர வீரருக்கு கம்பீர் அட்வைஸ்

Gautam Gambhir 223
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டாலும் 2வது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற தென்னாபிரிக்கா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. அதனால் இத்தொடரை சமன் செய்வதற்கு கடைசி போட்டியில் கண்டிப்பாக வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக போர்ட் எலிசபெத் நகரில் நடைபெற்ற 2வது போட்டியில் 6/2 என இந்தியா தடுமாறிய போது அதிரடியாக விளையாடிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் 5 பவுண்டரி 3 சிக்ஸருடன் 56 (36) ரன்கள் விளாசி சரிவை சரி செய்து 180/7 ரன்கள் குவிப்பதற்கு முக்கிய பங்காற்றினர். ஆனால் இப்படி டி20 கிரிக்கெட்டில் அட்டகாசமாக விளையாடும் அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதற்கு நேர்மாறாக சொதப்பி வருவது ரசிகர்களுக்கு புரியாத புதிராகவே இருக்கிறது.

- Advertisement -

கம்பீர் ஆலோசனை:
குறிப்பாக கடந்த பிப்ரவரியில் ஹாட்ரிக் கோல்டன் டக் அவுட்டான முதல் வீரராக மோசமான உலக சாதனை படைத்த அவர் 2023 உலகக் கோப்பை ஃபைனலில் படுமோசமாக விளையாடி இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார். இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் டி20 என்ற அணுகுமுறையை பின்பற்றி கிளன் மேக்ஸ்வெல் அசத்தும் போது உங்களால் சாதிக்க முடியாதா என சூரியகுமார் யாதவுக்கு முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் உத்வேகத்தை கொடுத்துள்ளார்.

இது பற்றி ஸ்டார்ட் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “சூரியகுமார் யாதவை ஒருவர் விமர்சிப்பதை நான் விரும்பவில்லை. ஆனால் டி20 கிரிக்கெட்டில் இந்தளவுக்கு ஆபத்தானவராக இருக்கும் அவர் அதே தரத்தை ஒருநாள் கிரிக்கெட்டில் காட்டாதது ஆச்சரியமாகும். இருப்பினும் டி20 கிரிக்கெட்டை போலவே கிளன் மேக்ஸ்வெல் ஒருநாள் கிரிக்கெட்டிலும் ஆபத்தானவராக விளையாடுகிறார்”

- Advertisement -

“அவர் உலகக் கோப்பையில் அதிவேகமாக இரட்டை சதமடித்தார். மறுபுறம் சூரியகுமார் யாதவ் கேரியரை சோதிக்கும் போது ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. என்னை கேட்டால் ஒருநாள் கிரிக்கெட்டில் டி20 போன்ற அணுகுமுறையை பின்பற்றி மேக்ஸ்வெல் சாதிப்பதை பின்பற்றினால் சூரியகுமாரை யாராலும் நிறுத்த முடியாது”

இதையும் படிங்க: இன்னும் ஜீரணிக்கவே முடியல.. தோல்விக்கு அது தான் காரணமா? 2023 உ.கோ பற்றி ரோஹித் சர்மா

“இது போன்ற இன்னிங்ஸ் விளையாடுவதற்காகவே உங்களை உலகக் கோப்பையில் தேர்வு செய்தார்கள். எனவே ஒருநாள் கிரிக்கெட்டில் மீண்டும் வாய்ப்பு பெற்றால் சூரியகுமார் தன்னுடைய அணுகுமுறையை டி20 போல பின்பற்ற வேண்டும் என்று நான் நம்புகிறேன். ஏனெனில் அவருடைய ஒருநாள் மற்றும் டி20 செயல்பாடுகளுக்கிடையே இவ்வளவு பெரிய வித்தியாசம் இருக்கக் கூடாது. குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் சூரியகுமார் ஒரு நல்ல இன்னிங்ஸ் கூட விளையாடி எனக்கு ஞாபகம் இல்லை” என்று கூறினார்.

Advertisement