இன்னும் ஜீரணிக்கவே முடியல.. தோல்விக்கு அது தான் காரணமா? 2023 உ.கோ பற்றி ரோஹித் சர்மா

Rohit Sharma CWC2023
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா லீக் சுற்றில் தோல்வியை சந்திக்காமல் செமி ஃபைனலில் நியூசிலாந்தை தோற்கடித்து தொடர்ந்து 10 வெற்றிகளை பதிவு செய்தது. ஆனால் மாபெரும் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பேட்டிங்கில் சொதப்பிய இந்தியா 240 ரன்கள் மட்டுமே எடுத்து 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் பொன்னான வாய்ப்பை நழுவ விட்டது.

அதனால் கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சங்கள் உடைந்தது போலவே முழுமூச்சுடன் போராடியும் கோப்பையை வெல்ல முடியாததால் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் களத்திலேயே கண்கலங்கினார்கள். இந்நிலையில் சுமார் ஒரு மாதங்கள் நிறைவு பெற்றும் உலகக்கோப்பை தோல்வியிலிருந்து தங்களால் வெளிவர முடியவில்லை என்று ரோகித் சர்மா மிகவும் சோகமாக பேசியுள்ளார்.

- Advertisement -

ஜீரணிக்க முடியல:
குறிப்பாக தொடர்ந்து 10 போட்டிகளில் வென்றும் கடைசியில் வெல்ல முடியாததை நினைத்தால் இப்போதும் ஜீரணிக்க முடியவில்லை என்று ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இதிலிருந்து எப்படி கம்பேக் கொடுப்பது என்பதற்கான ஐடியா என்னிடம் இல்லை. முதல் சில நாட்களில் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை”

“அந்த சமயங்களில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சுற்றியிருந்தது ஓரளவு உதவியாக இருந்தது. அதை ஜீரணிப்பது எளிதல்ல. ஆனால் வாழ்க்கை நகர்வதால் நீங்களும் வாழ்க்கையுடன் நகர வேண்டும். உண்மையாக அதிலிருந்து நகர்வது மிகவும் கடினமாக இருக்கிறது. ஏனெனில் நான் 50 ஓவர் உலகக் கோப்பையை பார்த்து வளர்ந்தேன். 50 ஓவர் உலகக் கோப்பை என்பது தான் நான் வெல்ல விரும்பிய மகத்தான பரிசு”

- Advertisement -

“இதற்காக கடந்த பல வருடங்களாக உழைத்தும் கடைசியில் கோப்பையை வெல்ல முடியாதது ஏமாற்றத்தை கொடுக்காதா? அதை வெல்வதையே நீங்கள் கனவாக பார்த்திருப்பீர்கள். அதனால் இப்போது அதை நினைத்தாலும் ஏமாற்றமும் எரிச்சலும் வருகிறது. ஏனெனில் எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் வெற்றிக்காக கொடுத்தோம். ஒருவேளை என்ன தவறு நடந்தது என்று யாராவது கேட்டால் 10 தொடர்ச்சியான வெற்றிகளை நான் சொல்வேன்”

இதையும் படிங்க: துவக்க வீரர்கள் இருவரும் டக் அவுட்டாகியும் நாங்க அதிரடியா விளையாட இதுவே கரணம் – சூரியகுமார் யாதவ் பேட்டி

“அந்த 10 போட்டிகளிலும் நாங்கள் சில தவறுகள் செய்திருப்போம். ஆனால் அது போன்ற தவறுகள் அனைத்து போட்டிகளிலும் நடக்கும். நீங்கள் எப்போதுமே 100% கச்சிதமான போட்டியை விளையாட முடியாது. மாறாக கட்சிதத்திற்கும் நெருக்கமான போட்டியை மட்டுமே விளையாட முடியும்” என்று கூறினார். இதைத்தொடர்ந்து 2024 டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கான பயணத்தை இந்தியா துவங்கியுள்ளது. அதில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா விளையாடுவது சந்தேகமாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement