துவக்க வீரர்கள் இருவரும் டக் அவுட்டாகியும் நாங்க அதிரடியா விளையாட இதுவே கரணம் – சூரியகுமார் யாதவ் பேட்டி

SKY
- Advertisement -

செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி முதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே ஜெய்ஸ்வாலின் விக்கெட்டை பறிகொடுத்தது. இதன் காரணமாக ரன் கணக்கை துவங்காமலே இந்திய அணி முதல் விக்கெட்டை பறிகொடுத்தது.

அதனை தொடர்ந்து அணியின் எண்ணிக்கை 6-ஆக இருந்தபோது இரண்டாவது ஓவரின் கடைசி பந்தில் சுப்மன் கில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். இப்படி துவக்க வீரர்கள் இருவருமே வெளியேற இந்திய அணி சிக்கலை சந்தித்தது. அதன் பிறகு இந்த சரிவிலிருந்து இந்திய அணி எவ்வாறு மீண்டு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் திலக் வர்மா 20 பந்துகளில் நான்கு பவுண்டரி ஒரு சிக்சர் என 29 ரன்களையும், சூரியகுமார் யாதவ் 36 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் 56 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினர்.

- Advertisement -

பின்னர் ரிங்கு சிங் 39 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 68 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருக்க ரவீந்திர ஜடேஜாவும் 19 ரன்கள் குவித்து அதிரடி காட்டினார். இப்படி பேட்ஸ்மேன்களில் மிகச்சிறப்பான ஆட்டம் காரணமாக இந்திய அணி 19.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் எடுத்து நல்ல நிலையில் இருந்த போது மழை குறுக்கிட்டது.

அதன் பின்னர் மழை காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்டு இலக்கும் குறைக்கப்பட்டதால் தென்னாப்பிரிக்க அணி இந்த போட்டியில் எளிதில் வெற்றி பெற்றது. இருப்பினும் இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் துவக்கத்திலேயே சரிவை சந்தித்தாலும் மிடில் ஆர்டரில் வந்த திலக் வர்மா, சூரியகுமார் யாதவ், ரிங்கு சிங் என அனைவருமே அதிரடியான ஆட்டத்தை கையில் எடுத்து விளையாடியது அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்றிருந்தது.

- Advertisement -

இந்நிலையில் இப்படி இந்திய அணி ஆரம்பத்திலேயே 2 விக்கெட்டை இழந்தாலும் மிடில் ஓவர்களில் தட்டி தட்டி விளையாடாமல் தொடர்ச்சியாக அதிரடியாக விளையாடியதற்கு என்ன காரணம்? என்பது குறித்து போட்டியின் முடிவில் இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில் : நாங்கள் இதுபோன்ற பயமற்ற ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதை பற்றிதான் கடந்த சில வாரங்களாகவே பேசி வருகிறோம்.

இதையும் படிங்க : எனக்கு தெரியாது.. அதுக்காக மன்னிப்பு கேட்டுக்குறேன்.. 2வது டி20 முடிவில் ரிங்கு சிங் பேட்டி

அதாவது மைதானத்திற்கு நாங்கள் செல்லும்பொழுது எங்களுடைய முழு திறனையும் வெளிப்படுத்த வேண்டும். குறிப்பாக சூழல் எவ்வாறு இருந்தாலும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்முடைய பயமற்ற ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். அதன்பிறகு முடிவு எவ்வாறு அமைந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று நான் எங்களது வீரர்களிடம் கூறிக்கொண்டே இருந்தேன். அந்த வகையில் இன்றைய போட்டியில் விக்கெட்டுகள் விழுந்தாலும் நாங்கள் அனைவரும் அதிரடி காட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது என சூரியகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement