இறுதி கட்டத்தை எட்டியுள்ள ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையில் லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா முதல் அணியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்று அசத்தியது. குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிராக லீக் சுற்றில் சந்தித்த பின்னடைவுக்கு சூப்பர் 4 சுற்றில் 228 ரன்கள் வித்தியாசத்தில் வரலாறு காணாத வெற்றியை பெற்ற இந்தியா நடப்பு சாம்பியன் இலங்கையையும்2வது போட்டியில் 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஃபைனலுக்கு சென்று தங்களை வலுவான அணி என்பதை மீண்டும் நிரூபித்தது.
அந்த நிலைமையில் செப்டம்பர் 15ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு இலங்கையின் கொழும்புவில் நடைபெற்ற இந்தியா தம்முடைய கடைசி சூப்பர் 4 போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொண்டது. ஏற்கனவே சூப்பர் 4 சுற்றிலிருந்து அடுத்தடுத்த தோல்விகளால் முதல் அணியாக வெளியேறிய வங்கதேசம் கத்துக்குட்டியாக பார்க்கப்படுவதால் இந்திய அணியில் எதிர்பார்த்தது போலவே சில மாற்றங்கள் செய்யப்பட்டது.
5 மாற்றங்கள்:
அதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததுடன் 2023 உலகக் கோப்பைக்கு புத்துணர்ச்சியுடன் களமிறங்குவதற்காக பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலிக்கு இந்த போட்டியில் ஓய்வு கொடுக்கப்படுவதாக தெரிவித்தார். அதன் காரணமாக அவரது இடத்தில் சூரியகுமார் யாதவ் விளையாடுவார் என்றும் ரோகித் சர்மா தெரிவித்தார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை அசத்தாவிட்டாலும் நம்பிக்கை வைத்து 2023 உலக கோப்பையில் தேர்வு செய்யப்பட்டுள்ள சூரியகுமார் அதற்கு முன் ஓரளவு ஃபார்முக்கு திரும்புவதற்காக இந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதே போல பணிச்சுமை கருத்தில் கொண்டு முதன்மை ஆல் ரவுண்டராக இருக்கும் துணை கேப்டன் ஹரிக் பாண்டியாவும் இந்த போட்டியில் ஓய்வெடுப்பதாக அறிவித்த ரோகித் சர்மா அவருக்கு பதிலாக திலக் வர்மா அறிமுகமாக களமிறங்குவதாக கூறினார்.
கடந்த சில வருடங்களாக ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் அசத்தி சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்ட அவர் உலகக்கோப்பையில் விளையாட வேண்டும் என்று நிறைய முன்னாள் வீரர்கள் ஆதரவு தெரிவித்தனர். இருப்பினும் ஒருநாள் கிரிக்கெட்டில் இன்னும் அறிமுகமாகாமலேயே இருக்கும் அவருக்கு தற்போது இந்திய அணி நிர்வாகம் அந்த வாய்ப்பை கொடுத்துள்ளது.
இதையும் படிங்க: ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதன் மூலம் இலங்கை படைத்துள்ள மாபெரும் சாதனை – விவரம் இதோ
அது போக ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப், முகமது சிராஜ் ஆகிய முக்கிய வீரர்கள் பணிச்சுமையை நிர்வகிப்பதற்காக இந்த போட்டியில் ஓய்வு பெற்ற நிலையில் அவர்களுக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா, முகமது ஷமி, சர்துள் தாக்கூர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இந்திய அணி இதோ: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், சூரியகுமார் யாதவ் திலக் வர்மா, கேஎல் ராகுல் (கீப்பர்), இஷான் கிசான், ரவீந்திர ஜடேஜா, சர்துள் தாகூர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, அக்சர் படேல்,