ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதன் மூலம் இலங்கை படைத்துள்ள மாபெரும் சாதனை – விவரம் இதோ

SL-Team
Advertisement

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாள் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்று கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரானது துவங்கியது. இந்த தொடரின் லீக் சுற்று போட்டிகளின் முடிவில் ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாள் ஆகிய அணிகள் இந்த தொடரில் இருந்து வெளியேற சூப்பர் போர் சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இலங்கை ஆகிய நான்கு அணிகள் தகுதி பெற்றிருந்தன.

இந்நிலையில் இந்த சூப்பர் போர் சுற்று ஆட்டத்திலும் கடுமையான போட்டிக்கு இடையே இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. அதேவேளையில் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகள் இந்த சூப்பர் போர் சுற்றோடு இந்த தொடரில் இருந்து வெளியேறியது.

- Advertisement -

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தற்போது இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டி வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி கொழும்பு நகரில் நடைபெற இருக்கிறது. அந்த இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி ஆசிய கோப்பை தொடரின் சாம்பியன் பட்டத்தை வெல்லும்.

இதன் காரணமாக தற்போதே இறுதிப்போட்டியில் வெற்றி பெறப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற மிக முக்கியமான போட்டியில் பாகிஸ்தான் அணியை இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம் ஆசிய கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் இதுவரை 16 முறை நடைபெற்றுள்ள ஆசிய கோப்பை தொடரில் இலங்கை அணியானது பன்னிரண்டாவது (12) முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அதே வேளையில் இந்திய அணி 10 முறையும், பாகிஸ்தான அணி ஐந்து முறையும், பங்களாதேஷ் மூன்று முறையும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இதையும் படிங்க : இதெல்லாம் சரில்ல.. ஃபைனலுக்கு சென்று கப் வாங்க அவங்கதா தகுதியான டீம் – சோயப் அக்தர் சோகமான பேட்டி

அதே போன்று இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 15 ஆசியக் கோப்பை தொடர்களில் இந்திய அணி அதிகபட்சமாக ஏழு முறையும், இலங்கை ஆறுமுறையும் ஆசியக் கோப்பை தொடரையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement