இதெல்லாம் சரில்ல.. ஃபைனலுக்கு சென்று கப் வாங்க அவங்கதா தகுதியான டீம் – சோயப் அக்தர் சோகமான பேட்டி

Shoaib Akhtar
- Advertisement -

அனல் பறந்து வரும் ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் மிகப்பெரிய சவாலை கொடுத்து கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் சூப்பர் 4 சுற்றுடன் வெளியேறியது அந்நாட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. குறிப்பாக லீக் சுற்றில் நேபாளை அடித்து நொறுக்கிய அந்த அணியை சூப்பர் 4 சுற்றில் 228 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா முதல் அணியாக ஃபைனலுக்கு தகுதி பெற்றது. அதனால் மோசமான ரன் ரேட் பெற்ற பாகிஸ்தான் கடைசி போட்டியில் இலங்கையை பெரிய வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டது.

அந்த சூழ்நிலையில் செப்டம்பர் 14ஆம் தேதி கொழும்புவில் மழையால் 42 ஓவர்களாக நடைபெற்ற அந்த போட்டியில் முகமது ரிஸ்வான் 86*, அப்துல்லா சபிக் 52 ரன்கள் எடுத்த உதவியுடன் பாகிஸ்தான் நிர்ணயித்த 252 ரன்கள் இலக்கை கடைசி பந்தில் எட்டிப்பிடித்த நடப்பு சாம்பியன் இலங்கை ஃபைனலுக்கு தகுதி பெற்ற அசத்தியது. குறிப்பாக கடைசி வரை போராடிய பாகிஸ்தானின் வெற்றியை கடைசி 2 பந்துகளில் 8 ரன்கள் தேவைப்பட்ட போது 4, 2 ரன்கள் விளாசி பறித்த அசலங்கா தன்னுடைய அணியை ஃபைனலுக்கு அழைத்துச் சென்றார்.

- Advertisement -

தகுதியான டீம்:
அதனால் இந்தியா போன்ற அணிகளை தோற்கடித்து வெற்றி வாகை சூடுவோம் என்று பேசிய பாகிஸ்தான் ஏமாற்றத்துடன் நாடு திரும்பியது. இந்நிலையில் இத்தொடரின் ஃபைனலில் விளையாடி கோப்பையை வெல்வதற்கு பாகிஸ்தான் தகுதியான அணி என்று சோயப் அக்தர் தெரிவித்துள்ளார். ஆனால் அது நடைபெறாததால் ஆசிய கோப்பை ஃபைனலில் இந்தியா – பாகிஸ்தான் விளையாடுவதை பார்க்கலாம் என்ற தம்முடைய கனவு மீண்டும் தகர்ந்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி ட்விட்டரில் பேசியது பின்வருமாறு.

“போட்டியை நீங்கள் பார்த்தீர்கள். பாகிஸ்தான் தொடரிலிருந்து வெளியேறியது. இருப்பினும் ஜமான் கான் போராட்டதால் அப்போட்டி பாகிஸ்தானுக்கு சாதகமாக மாறியது. குறிப்பாக நேற்று இலங்கை சென்ற அவர் இஎஸ்எல் தொடரில் பந்து வீசியதை போலவே இப்போட்டியிலும் அசத்தினார். ஷாஹீன் அப்ரிடியும் சில விக்கெட்டுகளை எடுத்தார். ஆனால் பாராட்டுக்கள் சிறப்பாக பந்து வீசிய ஜமான் கானுக்கு சேரும்”

- Advertisement -

“என்னை கேட்டால் பாகிஸ்தான் இந்த ஆசிய கோப்பை ஃபைனலில் விளையாடி கோப்பையை வெல்வதற்கு தகுதியான அணியாகும். ஆனால் அவர்கள் வெளியேறி விட்டார்கள். கோப்பையை வெல்லும் அணியாக கருதப்பட்ட அவர்கள் தற்போது வெளியேறியுள்ளதால் நிறைய விமர்சனங்களை சந்திப்பார்கள். இதன் காரணமாக ஃபைனலில் இந்தியா – பாகிஸ்தான் விளையாடுவதையும் நம்மால் பார்க்க முடியாது”

இதையும் படிங்க: நம்பர் ஒன் பாகிஸ்தானுக்கு ஒரே மாதத்தில் இந்தியாவால் ஏற்பட்ட சோகம்.. ஆசிய கோப்பையால் நேர்ந்த மற்றொரு பரிதாபம்

“இம்முறை அதற்கு நல்ல வாய்ப்பு ஏற்பட்ட போதிலும் சரியான செயல்பாடுகளை வெளிப்படுத்தி இலங்கை ஃபைனலுக்கு சென்றது. அவர்களும் சிறந்த அணியாகவே இருக்கின்றனர். இந்த மோசமான தோல்வியால் பாகிஸ்தான் தொடரிலிருந்து வெளியேறியதை பார்க்கும் போது நன்றாக இல்லை. கேப்டன்ஷிப் இன்னும் சற்று கூர்மையாக்கப்பட வேண்டும். மொத்தத்தில் பெரிய ஏமாற்றத்தை சந்தித்துள்ள நான் இதற்கு மேல் எதுவும் சொல்லவில்லை” என்று கூறினார்.

Advertisement