நம்பர் ஒன் பாகிஸ்தானுக்கு ஒரே மாதத்தில் இந்தியாவால் ஏற்பட்ட சோகம்.. ஆசிய கோப்பையால் நேர்ந்த மற்றொரு பரிதாபம்

ICC Rankings
- Advertisement -

உச்சகட்ட பரபரப்பில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற்ற முக்கியமான சூப்பர் 4 போட்டியில் நடப்பு சாம்பியன் இலங்கையிடம் வெறும் 2 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வீழ்ந்த பாகிஸ்தான் ஃபைனலுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. முன்னதாக பாபர் அசாம், முகமது ரிஸ்வான் போன்ற தரமான பேட்ஸ்மேன்களை விட சாகின் அப்ரிடி, ஹரிஷ் ரவூப், நாசீம் ஷா போன்ற உலகத்தரம் வாய்ந்த பவுலர்களை பாகிஸ்தான் அணி கொண்டுள்ளது.

அதனால் இந்த தொடரில் நிச்சயமாக இந்தியா போன்ற அணிகளை அசால்டாக தோற்கடித்து பாகிஸ்தான் கோப்பை வெல்லும் என்று அந்நாட்டவர்கள் ஆரம்பத்திலேயே தெரிவித்தனர். அதற்கேற்றார் போல் இத்தொடருக்கு தயாராகும் வகையில் கடந்த மாதம் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இதே இலங்கை மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிய பாகிஸ்தான் 3 – 0 என்ற கணக்கில் கோப்பையை வென்றது.

- Advertisement -

ஒரே மாதத்தில் மாற்றம்:
அதனால் ஐசிசி தரவரிசையில் ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளிய பாகிஸ்தான் உலகின் புதிய நம்பர் ஒன் அணியாக முன்னேறி சாதனை படைத்தது. அதைத்தொடர்ந்து ஆசிய கோப்பை லீக் சுற்றிலும் இந்தியாவை 66/4 என ஆரம்பத்திலேயே திணறடிக்கும் அளவுக்கு சாகின் அப்ரிடி போன்றவர்கள் நெருப்பாக பந்து வீசி மிரட்டலை கொடுத்தனர்.

ஆனால் சூப்பர் 4 சுற்றில் அதே பவுலர்களை விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக எதிர்கொண்டு பாகிஸ்தானுக்கு 228 ரன்களை வித்தியாசத்தில் வரலாற்று தோல்வியை பரிசளித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தனர். அதற்கிடையே தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றதன் காரணமாக ஐசிசி தரவரிசையில் பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளிய ஆஸ்திரேலியா உலகின் நம்பர் ஒன் அணி என்ற அந்தஸ்தை மீண்டும் பெற்றது.

- Advertisement -

அந்த நிலைமையில் இலங்கைக்கு எதிரான நேற்றைய போட்டியில் மீண்டும் தோல்வியை சந்தித்ததால் தற்போது ஐசிசி வெளியிட்டுள்ள புதிய தரவரிசையில் 2வது இடத்தில் இருந்த பாகிஸ்தானை 3வது இடத்திற்கு இந்தியா பின்னுக்கு தள்ளியுள்ளது. அதனால் பாகிஸ்தான் 115 புள்ளிகளுடன் 3வது இடத்திற்கு சரிந்த நிலையில் இந்தியா 116 புள்ளிகளுடன் உலகின் நம்பர் 2 அணியாக முன்னேறியுள்ளது.

இதையும் படிங்க: 2 விக்கெட் அடுத்தடுத்து போனதும் பயந்துட்டோம்.. ஆனா கடைசில.. த்ரில் வெற்றி குறித்து பேசிய – ஆட்டநாயகன் குசால் மெண்டிஸ்

மேலும் ஃபைனலில் இலங்கையை தோற்கடித்து கோப்பையை வெல்லும் பட்சத்தில் முதலிடத்தில் 118 புள்ளிகளுடன் இருக்கும் ஆஸ்திரேலியாவையும் பின்னுக்கு தள்ளி விரைவில் இந்தியா உலகின் புதிய நம்பர் ஒன் ஒருநாள் அணியாக முன்னேறுவதற்கும் வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளது. மொத்தத்தில் கடந்த மாதம் உலகின் புதிய நம்பர் ஒன் அணியாக முன்னேறி சாதனை படைத்த பாகிஸ்தான் அதை இந்தியாவிடம் சந்தித்த படுதோல்வியால் ஒரு மாதம் கூட தக்க வைத்துக் கொள்ள முடியாமல் கோட்டை விட்டு பரிதாபத்தை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement