2 விக்கெட் அடுத்தடுத்து போனதும் பயந்துட்டோம்.. ஆனா கடைசில.. த்ரில் வெற்றி குறித்து பேசிய – ஆட்டநாயகன் குசால் மெண்டிஸ்

Kusal-Mendis
- Advertisement -

தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணியானது தற்போது சொந்த மண்ணில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்று போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி தற்போது சூப்பர் போர் சுற்று ஆட்டத்திலும் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் இறுதி போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளது.

அதன்படி நேற்று கொழும்பு மைதானத்தில் நடைபெற்ற சூப்பர் போர் சுற்றின் ஐந்தாவது ஆட்டத்தில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 42 ஓவரில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 252 ரன்களை குவித்தது. பின்னர் 253 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை அணி போட்டியின் கடைசி பந்தில் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் இலங்கை அணி சார்பாக அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான குசால் மெண்டிஸ் 87 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 91 ரன்கள் குவித்து அசத்தினார். அவரது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் போட்டி முடிந்து தனது சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய குசால் மெண்டிஸ் கூறுகையில் : இந்த போட்டியில் நான் விளையாடிய விதத்தை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். அதோடு இறுதிப் போட்டிக்கும் நாங்கள் தகுதி பெற்றது கூடுதல் மகிழ்ச்சியை தந்துள்ளது.

- Advertisement -

ஒரு கட்டத்தில் கடைசி ஓவருக்கு முன்னதாக அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்த போது பதட்டம் அடைந்தேன். ஆனால் இறுதியில் அசலங்கா போட்டியை முடித்து கொடுப்பார் என்ற நம்பிக்கை இருந்தது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஏற்கனவே அவர் ஒரு போட்டியில் எங்களை வெற்றி பெற வைத்தார். அதேபோன்று இந்த போட்டியில் வெற்றி பெற வைத்துள்ளார். இந்த போட்டியில் எங்களது அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசியதாக நினைக்கிறேன்.

இதையும் படிங்க : தோற்றது தெரியாமல் ஃபைனலில் விளையாட இலங்கைக்கு சென்ற பாகிஸ்தான் வீரர்.. ஏடிஎம் மெஷின் போல அலைந்த பரிதாபம்

லஹிரு குமாரா, ஹசரங்கா, துஷ்மந்தா சமீரா ஆகியோர் இல்லாமலேயே இளம் வீரர்களை கொண்ட எங்களது பந்துவீச்சு யூனிட் மிகச் சிறப்பாக செயல்பட்டதாக நினைக்கிறேன். இந்த போட்டியில் ரசிகர்கள் எங்களுக்கு மிகச் சிறப்பான ஆதரவை அளித்தனர். அதேபோன்று இறுதிப்போட்டியில் அவர்கள் எங்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்று நம்புவதாக குசால் மெண்டிஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement