தோற்றது தெரியாமல் ஃபைனலில் விளையாட இலங்கைக்கு சென்ற பாகிஸ்தான் வீரர்.. ஏடிஎம் மெஷின் போல அலைந்த பரிதாபம்

Shahnawaz dahani
Advertisement

உச்சக்கட்டத்தை எட்டியுள்ள ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற்ற முக்கியமான சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தானை 2 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து த்ரில் வெற்றி பெற்ற இலங்கை செப்டம்பர் 17ஆம் தேதி இந்தியாவுக்கு எதிராக நடைபெறும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அதனால் இந்த ஆசிய கோப்பையை வெல்ல வேண்டுமென்ற பாகிஸ்தானின் கனவு முடிவுக்கு வந்தது அந்நாட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. முன்னதாக இந்த தொடரில் இந்தியா உட்பட அனைத்து அணிகளையும் தோற்கடித்து வெற்றி வாகை சூடுவோம் என்று ஆரம்பத்திலேயே நிறைய பாகிஸ்தான் வீரர்கள் பேசியதை மறக்க முடியாது.

அந்த நிலைமையில் லீக் சுற்றில் நேபாளை மட்டும் புரட்டி எடுத்த பாகிஸ்தான் சூப்பர் 4 சுற்றில் இந்தியாவிடம் 228 ரன்கள் வித்தியாசத்தில் மெகா தோல்வியை சந்தித்தது. அதை விட அந்த போட்டியில் ஹரிஷ் ரவூப், நாசீம் ஷா ஆகிய 2 முக்கிய பவுலர்கள் காயத்தை சந்தித்து வெளியேறியது பாகிஸ்தானுக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது. இருப்பினும் நிலைமையை சமாளிப்பதற்காக ஹரிஷ் ரவூப்க்கு பதிலாக விளையாடுவதற்கு சனவாஸ் தஹானியை பாகிஸ்தான் அணி நிர்வாகம் இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்தது.

- Advertisement -

ஏடிஎம் மெசின்:
அதை தொடர்ந்து இலங்கைக்கு புறப்படுவதை செப்டம்பர் 13ஆம் தேதி நம்முடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட தஹானி மகிழ்ச்சியுடன் பாகிஸ்தான் அணியில் சேர்வதற்காக கிளம்பினார். மேலும் அந்த அழைப்பு வந்த போது இஸ்லாமாபாத் நகரில் இருந்த அவர் கராச்சிக்கு சென்று அங்கிருந்து இலங்கை புறப்படுவதற்கு முன்பாக லாஹூரில் இருக்கும் என்சிஏவில் இரவு தங்கினார்.

அதைத்தொடர்ந்து லாகூரிலிருந்து கராச்சிக்கு சென்ற அவர் அங்கிருந்து துபாய்க்கு சென்று அடுத்த நாள் காலை துபாயிலிருந்து கொழும்புவிற்கு பறந்தார். அந்த நிலைமையில் இலங்கைக்கு எதிராக கடைசி பந்து வரை போராடிய பாகிஸ்தான் செப்டம்பர் 15ஆம் தேதி அதிகாலை 1 மணியளவில் தோல்வியை சந்தித்தது. இருப்பினும் விமானத்தில் வந்ததால் அதைப் பற்றி தெரியாத தஹானி அடுத்த சில நிமிடங்களில் இலங்கைக்கு வந்து விட்டதாக மீண்டும் தம்முடைய சமூகவலை பக்கத்தில் பதிவிட்டார்.

- Advertisement -

அதாவது 2023 ஆசிய கோப்பை ஃபைனலில் விளையாடலாம் என்ற கனவுடன் இலங்கையில் அவர் கால் பதித்த நிமிடங்களில் பாகிஸ்தான் பரிதாப தோல்வியை சந்தித்து நாடு திரும்புவதற்கு பெட்டிப் படுக்கைகளை கட்டுவதற்கு தயாரானது. அதனால் உங்களது அணி வீரர்களும் தயாராகி விட்டார்கள் அவர்களையும் அழைத்துக் கொண்டு நாடு திரும்புங்கள் என்று சமூகவலைதளத்தில் அவருக்கு ரசிகர்கள் பதிலளித்து கலகலப்பை வெளிப்படுத்தினார்கள்.

இதையும் படிங்க: இந்தியாவை பற்றி கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனீங்க.. பெரிய உதவி செய்தும் வீட்டுக்கு கிளம்பிய பாகிஸ்தான்.. இந்திய ரசிகர்கள் பதிலடி

இருப்பினும் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் 2 நாட்களாக விமானத்தின் வாயிலாகவே பயணித்து கடைசியில் ஏமாற்றத்தை சந்தித்த சனவாஸ் தஹாணி கிட்டத்தட்ட ஏடிஎம் மெஷின் போல பயன்படுத்தப்பட்டதாக சமூக வலைதளத்தில் முன்னாள் பாகிஸ்தான் வீரர் ரஷீத் லத்திப் விமர்சித்துள்ளார். மொத்தத்தில் களத்தில் பல குளறுபடிகளை செய்த பாகிஸ்தானுக்காக அணிக்காக விளையாட அந்நாட்டு வீரர் இப்படி அலைந்து திரிந்தது ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

Advertisement