இந்தியாவை பற்றி கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனீங்க.. பெரிய உதவி செய்தும் வீட்டுக்கு கிளம்பிய பாகிஸ்தான்.. இந்திய ரசிகர்கள் பதிலடி

INd vS PAK 55
- Advertisement -

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆசிய கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிக்கும் ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி பாகிஸ்தானில் துவங்கியது. 2023 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் 50 ஓவர் போட்டிகளாக நடைபெறும் இந்த தொடரில் ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாள் லீக் சுற்றுடன் வெளியேறிய நிலையில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா முதல் அணியாக ஃபைனலுக்கு தகுதி பெற்றது. மறுபுறம் இந்தியாவிடம் சூப்பர் 4 சுற்றில் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் மற்றும் நடப்பு சாம்பியன் இலங்கை அணிகள் செப்டம்பர் 14ஆம் தேதி சந்தித்த போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கின.

அந்த போட்டியில் மழைக்கு மத்தியில் பாகிஸ்தானை 2 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இலங்கை செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெறும் ஃபைனலுக்கு தகுதி பெற்ற மீண்டும் அசத்தியுள்ளது. கொழும்புவில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் நிர்ணயித்த 252 ரன்களை கடைசி ஓவரில் 4, 2 ரன்கள் அடித்து வெற்றி பெற வைத்த அசலங்கா இலங்கையை ஃபைனலுக்கு அழைத்து சென்றார்.

- Advertisement -

பாகிஸ்தானின் பேச்சு:
முன்னதாக அடிக்கடி கேப்டன்களை மாற்றுவது வீரர்களை சோதிப்பது போன்ற குளறுபடிகளை செய்து இந்தியா தங்களை தாங்களே அழித்து கொண்டிப்பதாக உன்னால் பாகிஸ்தான் வீரர்கள் தெரிவித்தனர். மேலும் கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்கள் காயத்திலிருந்து குணமடைந்து வந்ததுள்ள பலவீனமான மிடில் ஆர்டரை கொண்ட இந்திய அணியை நன்கு செட்டிலாகி ஃபிட்டாக இருக்கும் பாகிஸ்தான் இத்தொடரில் கண்டிப்பாக தோற்கடிக்கும் என்று டேனிஷ் கனேரியா, சோயப் அக்தர், ரசித் லதீப் போன்ற முன்னாள் வீரர்கள் பேசினார்கள்.

அது போக ஷாஹீன் அப்ரிடி, ஹரிஷ் ரவூப் போன்ற உலகத்தரம் வாய்ந்த பவுலிங்கை கொண்ட தங்களுடைய அணி கோப்பையுடன் உலககோப்பையிலும் இந்தியாவை வீழ்த்தும் என்று அந்நாட்டவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஏராளமான பேட்டிகளை கொடுத்தனர். ஆனால் ஆசிய கோப்பையின் முதல் போட்டியில் ஷாஹீன் அப்ரிடியின் தாக்கத்தால் 66/4 என சரிந்தும் இசான் கிசான் – பாண்டியா ஆகியோர் மிடில் ஆர்டர் பேட்மின்களின் அட்டகாசமான ஆட்டத்தால் இந்தியா 266 ரன்கள் குவித்து பதிலடி கொடுத்தது.

- Advertisement -

அதை விட சூப்பர் 4 சுற்றில் அதே பவுலர்களை அதே இந்திய டாப் 4 பேட்ஸ்மேன்களை அதிரடியாக எதிர்கொண்டு 228 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானுக்கு வரலாற்று தோல்வியை பரிசளித்து தெறிக்க விட்டனர். அதனால் மோசமான ரன்ரேட் பெற்ற பாகிஸ்தான் ஃபைனலுக்கு செல்ல இலங்கையை நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் இந்தியா தோற்கடிக்க வேண்டும் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டது.

இதையும் படிங்க: கடைசி வரை அவர் இருந்தா நாங்க ஜெயிப்போம்னு நம்பிக்கை இருந்துச்சி – இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பின்னர் ஷனகா மகிழ்ச்சி

அந்த சூழ்நிலையில் இலங்கையை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா மறைமுகமாக பாகிஸ்தானுக்கு உதவியது. ஆனால் அந்த உதவியை சரியாக பயன்படுத்தத் தவறிய பாகிஸ்தான் இந்த போட்டியில் தோல்வியை சந்தித்து பரிதாபமாக நாட்டுக்கு திரும்புவதற்கு பெட்டி படிக்கையை கட்டியுள்ளது. அப்படி மறைமுகமான உதவி செய்தும் முக்கிய போட்டியில் சொதப்பி பாகிஸ்தான் வெளியேறியதை பார்க்கும் இந்திய ரசிகர்கள் “எங்களை தோற்கடிப்போம், தெறிக்க விடுவோம் என்று கொஞ்ச நஞ்ச பேச்சா பேசினீங்க” என்று பதிலடி கொடுத்து நாட்டுக்கு பத்திரமாக கிளம்புங்கள் என்று சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர்.

Advertisement